சங்க நிதி (இறைவி)
ஒன்பது வகையான நிதிகளுள் (நவ நிதிகள்) சங்க நிதிக்குரிய தெய்வமாக சங்க நிதி உள்ளார். இவரை சங்க லட்சுமி எனவும் அழைக்கின்றனர். சங்க நிதி தன்னுடைய கைகளில் செல்வச் செழிப்பினைக் குறிக்கும் அடையாளமான வலம்புரிச் சங்கினை வைத்துள்ளார்.
சங்கநிதி | |
---|---|
சங்கநிதி ஓவியம் | |
அதிபதி | சங்க நிதி |
ஆயுதம் | வலம்புரிச் சங்கு |
துணை | குபேரன் |
இந்து சமய கோயில்களின் வாயில்கள் சிலவற்றில் ஒருபுறம் சங்கநிதி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பதுமநிதி புடைப்புச் சிற்பம் உள்ளது.
இவரை குபேரனின் மனைவியாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.[சான்று தேவை]
சங்க நிதி, பதும நிதி என இரு தெய்வ மகளிரிடமும் குபேரன் தன் செல்வங்களைக் கொடுத்து வைத்துள்ளதாக நம்பப்படுகிறது.
சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் ஆகியன ஒன்பது நிதிகளாகும். இவற்றை குபேர சம்பத்துகள் என அழைக்கின்றனர். இந்த ஒன்பது நிதிகளில் சங்கநிதி மற்றும் பதும நிதி இரண்டிற்கு மட்டுமே உருவங்கள் உள்ளன.
சங்கநிதி, பதுமநிதி என இருநிதிகளும் எப்போதுமே ஒருசேர இருக்கின்றனர்.
மந்திரம்
தொகுஓம் ஸ்ரீம் க்லீம் சங்கநிதயே நம: சூர்ய வாசாய மாணிக்க ரத்னப்ரியாய கமல புஷ்ப வாசாய சங்கரூபே நிதிதேவாயநம: ஆவாகயாமி.
நவநிதிசேவை
தொகு- ஓம் மகேஸ்வரன் நேசனும்
- நாரணன் பத்தினியும், மகதைஸ்வர்யம் தந்து நிற்க
- மகாதேவன் திருவருளால் மங்களமும் வந்துதிக்க
- குருவருளும் முன் நின்று குலம் வாழக் காக்க
- மருவான தரித்திரங்கள் மறைந்து ஓடிட
- ஒரு காலும் பிரியாத நவநிதிகள் முன்நிற்க
- சங்கநிதி பதுமநிதி சாட்சிபோன்று நிற்க
- சங்காக்யம் மகாபத்மம் மகராக்யம் மகிழ
- சுகச்சபமும் முகுந்த குந்தளமும் சிரிக்க
- நீலவனும் நெருங்கி நேசமுடன் காக்க
- நிதியருளால் எல்லாமும் ஏற்றமாய்ச் சேர
- விதிதனையே மாற்றி அருள் நிதியும் குவிய
- அகிலமதில் மானுடமும் அழகுடனே வாழ்க!
ஆதாரங்கள்
தொகு
வெளி இணைப்புகள்
தொகு- [https://web.archive.org/web/20120718160244/http://www.melbournevinayagar.org.au/index.php/slogans-mantras/27---108-- பரணிடப்பட்டது 2012-07-18 at the வந்தவழி இயந்திரம் ஸ்ரீ பைரவர் 108 போற்றி]]
- காலபைரவாஷ்டமி பரணிடப்பட்டது 2009-11-08 at the வந்தவழி இயந்திரம்