சங்லூன் தமிழ்ப்பள்ளி


சங்லூன் தமிழ்ப்பள்ளி மலேசியா கெடா மாநிலத்தின் குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி ஆகும். இது கெடா மாநிலத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. சங்லூன் வாழ் மக்களிடையே இந்தப் பள்ளிக்கூடம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இதுவே சங்லூன் பகுதியில் அமைந்துள்ள ஒரே தமிழ்ப்பள்ளியும் ஆகும்.[1]

சங்லூன் தமிழ்ப்பள்ளி
SJK(T) Changlun
அமைவிடம்
கெடா, மலேசியா
தகவல்
வகைஇரு பாலர் பயிலும் பள்ளி
தொடக்கம்1947
பள்ளி மாவட்டம்குபாங் பாசு
கல்வி ஆணையம்மலேசியக் கல்வி அமைச்சு
பள்ளி இலக்கம்KBD 4050
தலைமை ஆசிரியர்குமாரி ஜி. சாந்தி (தொடக்கம்:02.11.2012 - 15.11.2015 வரை)
சுப்பிரமணியம் (16.11.2015 தொடக்கம்)
தரங்கள்1 முதல் 6 வகுப்பு வரை
மாணவர்கள்66
கல்வி முறைமலேசியக் கல்வித்திட்டம்

சங்லூன் தமிழ்ப்பள்ளி 30 மாணவர்களுடன் 1947 ஜூன் 01 ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. முதன்முதலில் சங்லூன் பகுதியில் இருந்த கியெட் லூங் (Ladang Kiet Loong Changlun) எனும் ரப்பர் தோட்டத்தில் உருவானது. அப்போது ஒரே ஓர் ஆசிரியர்தான் அப்பள்ளியில் பணிபுரிந்தார்.

1948 இல் மாணவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்வு கண்டது. அடுத்து வந்த காலங்களில் தமிழ்மொழியின் மீது ஏற்பட்ட தாக்கத்தினால் பெற்றோர்கள் பலர் தங்களின் பிள்ளைகளைச் சங்லூன் தமிழ்ப்பள்ளியிலேயே பதிவு செய்தனர்.

2015 ஆம் ஆண்டு புதிய நான்கு மாடிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. 2016 ஆம் ஆண்டு இறுதிவாக்கில் புதிய பள்ளியின் புகுபள்ளி விழா நடைபெற உள்ளது.

வரலாறு தொகு

1947 ஜூன் 01 ஆம் தேதி சங்லூன் தமிழ்ப்பள்ளி அப்பகுதியில் இருந்த கியெட் லூங் எனும் ரப்பர் தோட்டத்தில் உருவானது. அந்தக் கட்டத்தில் ஒரே ஓர் ஆசிரியர்தான் அந்தப் பள்ளியில் பணிபுரிந்தார். 1948 இல் மாணவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்வு கண்டது. தமிழ்மொழியின் மீது ஏற்பட்ட தாக்கத்தினால் சங்லூன் வாழ் பெற்றோர்கள் பலர் தங்களின் பிள்ளைகளைச் சங்லூன் தமிழ்ப்பள்ளியிலேயே பதிவு செய்தனர்.

1969 ஆம் ஆண்டு பள்ளியின் கட்டுமானத்தில் சேதங்கள் ஏற்பட்டன. மாணவர்கள் தொடர்ந்து அப்பள்ளியில் கல்வி கற்றால் அவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படலாம் என கல்வி இலாகா அதிகாரிகள் அஞ்சினர். அதனால் அங்கு பயின்ற மாணவர்களை வேறு ஓர் இடத்திற்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்தனர். அந்த வகையில் பள்ளி மாணவர்கள் சங்லூன் டத்தோ வான் கெமாரா தேசியப் பள்ளிக்கு மாற்றப் பட்டனர்.

புதிய நான்கு மாடிக் கட்டடம் தொகு

சில ஆண்டுகள் சங்லூன் தமிழ்ப்பள்ளி, டத்தோ வான் கெமாரா தேசியப் பள்ளியில் மாலை நேரத்தில் இயங்கி வந்தது. பின்னர் இட் மின் சீனப்பள்ளிக்கு மாற்றம் கண்டது. 1981 ஆம் ஆண்டு சங்லூன் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு புதிய கட்டடத்தைக் கட்டுவதற்குத் தனியாக ஒரு நிலம் கிடைத்தது. அந்தப் புதிய நிலத்தில் தான் இப்போதைய பள்ளியும் அமைந்து உள்ளது.

1987 ஆம் ஆண்டு சங்லூன் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவின் பேரில் சங்லூன் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு புதிய இணைக் கட்டமும் கிடைத்தது. 2015 ஆம் ஆண்டு புதிய நான்கு மாடிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்த நிலத்தைச் சங்லூன் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் வாங்கிக் கொடுத்தது.[2]

  • மலேசியக் கல்வியமைச்சின் சார்பில் துணைக்கல்வி அமைச்சர் பி. கமலநாதன்,
  • சங்லூன் தமிழ்ப்பள்ளியின் சார்பில் தலைமையாசிரியை குமாரி. ஜி.சாந்தி,
  • பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சு. இராஜேந்திரன்,[3]
  • பள்ளி வாரியத்தின் சார்பில் கோ. கருணாநிதி

ஆகியோரும் உள்ளூர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.[4]

படத் தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்லூன்_தமிழ்ப்பள்ளி&oldid=3448680" இலிருந்து மீள்விக்கப்பட்டது