சசிகாந்த் செந்தில்

தமிழக அரசியல்வாதி

சசிகாந்த் செந்தில் (sasikanth senthil, 28 மார்ச், 1979) என்பவர் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்த முன்னாள் இ.ஆ.ப அதிகாரியும், இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும் ஆவார். இவர் 2024 பொதுத் தேர்தலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சசிகாந்த் செந்தில்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்கே. ஜெயக்குமார்
தொகுதிதிருவள்ளூர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியாn
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

வாழ்கை

தொகு

சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் 2009இல் கருநாடகத்தின் இ.ஆ.ப அதிகாரியாக தன் பணியைத் தொடங்கினார். ராய்ச்சூர், சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். அதன் பின்னர் கருநாடக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றினார். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் நரேந்திர மோதி மீ்ண்டும் வெற்றிபெற்றதைக் கண்டு வருந்தி தன் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.

இதன்பிறகு மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டார். பின்னர் காங்கிரசில் இவருக்கு சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. 2023 கருநாடக சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரசு செண்டரல் வார் ரூம் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] இதனையடுத்து கருநாடக மாநில ப.ஜ.க ஆட்சியின் ஊழல் போன்ற முக்கிய சிக்கல்களை மக்களிடம் புதிய யுக்தியில் கொண்டு சென்று கவனத்தை ஈர்த்தார்.[3] இவ்வாறு திறப்பட செயல்பட்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய முக்கிய பங்காற்றினார்.[4]

இவருக்கு 2024 பொதுத் தேர்தலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பளித்தது. அந்தத் தேர்தலில் சசிகாந்த் செந்தில் மொத்தம் 7,96,953 வாக்குகளைப் பெற்றார். இவருக்கு அடுத்துவந்த பா.ஜ.க வேட்பாளரைவிட 5,72 இலட்சம் வாக்குகளைக் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "5,72,155... தமிழக அளவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற சசிகாந்த் செந்தில் @ திருவள்ளூர்", Hindu Tamil Thisai, 2024-06-05, பார்க்கப்பட்ட நாள் 2024-06-11
  2. "திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் - யார் இந்த சசிகாந்த் செந்தில்?". 2024-03-24. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  3. ஐஏஎஸ் டூ நாடாளுமன்றம்.. திருவள்ளூரை திரும்பி பார்க்க வைத்த வேட்பாளர்.. யார் இந்த சசிகாந்த் செந்தில்? ஒன்இந்தியா 5, சூன் 2024
  4. vinothkumar. "திருவள்ளூர் தொகுதியில் வரலாற்றுச் சாதனை வெற்றி படைத்த காங்கிரஸ் வேட்பாளர்! யார் இந்த சசிகாந்த் செந்தில்?". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  5. DIN (2024-06-04). "திருவள்ளூர்: 5.7 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சசிகாந்த் செந்தில் வெற்றி!". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசிகாந்த்_செந்தில்&oldid=4002875" இலிருந்து மீள்விக்கப்பட்டது