சசிபெருமாள்

காந்தியவாதி

செ. க. சசிபெருமாள், (இறப்பு: 31 சூலை 2015, அகவை 59), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். முப்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு கோரி போராடிய காந்தியவாதி ஆவார். நீண்ட காலமாகத் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி உண்ணா நோன்பு போராட்டங்களை நடத்தியவர்.

2014ஆம் ஆண்டில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், முழு மதுவிலக்கு கோரி 36 நாட்கள் உண்ணாநோன்பு இருந்தவர்.[1][2][3][4]

இறுதியாக 31 சூலை 2015 அன்று கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே தமிழ்நாடுகேரள எல்லை அருகே உண்ணாமலைக் கடை என்ற ஊரில் கல்வி நிறுவனங்களுக்கும், வழிபாட்டுத்தலங்களுக்கும் அருகிலுள்ள மதுக்கடையை மூடக்கோரி, இருநூறு அடி உயர அலைபேசி கோபுரத்தின் உச்சிமீது ஏறிப் போராடிய போது இவர் உயிரிழந்தார். [5][6]காவல் துறை சசிபெருமாளின் மரணத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்தது.[7]

சசிபெருமாளுக்கு மகிழம் அம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்[8].

மேற்கோள்கள்தொகு

  1. AAP supports Sasi Perumal’s fast for total prohibition
  2. Special News About Gandhian Activist Sasi Perumal spl video news 31-07-2015 Thanthi TV | Who is Sasi Perumal? காணொளிக் காட்சி
  3. சசிபெருமாள் போராட்டம்
  4. சசிபெருமாளின் உரை: காணொளி காட்சி
  5. http://www.bbc.com/tamil/india/2015/07/150731_sasiperumal
  6. Gandhian activist Sasi Perumal dies during anti-liquor protest
  7. http://www.dinamalar.com/news_detail.asp?id=1308207 சசிபெருமாள் மரணம் ஏன்? எஸ்.பி., விளக்கம்]
  8. Gandhian Sasi Perumal Dies While Staging Demonstration Atop Cellphone Tower

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சசிபெருமாள்&oldid=2385368" இருந்து மீள்விக்கப்பட்டது