மதுவிலக்கு

மதுவிலக்கு என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் (நாடு, மாநிலம் அல்லது நகரம்) மதுவின் தயாரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனையைத் தடை செய்யும் சட்ட நடவடிக்கை ஆகும். பொதுவாக சமயம், சமூக சீர்திருத்தம், பொதுநலம் போன்ற காரணங்களால் மதுவிலக்குக் கொள்கைகள் அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. உலக வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில், பலதரப்பட்ட மதுவிலக்குக் கொள்கைகள் அமலில் இருந்துள்ளன. மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் காலங்களில் சட்டத்துக்குப் புறம்பான மதுபானத் தயாரிப்பும் விற்பனையும் அதிகரிப்பது வழக்கம்.

காந்தியின் முழு மதுவிலக்குப் போராட்டம்

தொகு

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கு எதிராக, 1930ஆம் ஆண்டில் இந்தியாவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி மகாத்மா காந்தி அறிவித்த சாராயம் மற்றும் கள்ளுக் கடை மறியல் போராட்டங்களின் விளைவாக அன்றைய சென்னை மாகாணத்தில் 9000 சாராயக் கடைகளை ஏலம் எடுக்க ஆளின்றி 6000க்கு மேற்பட்டவை அடைக்கப்பட்டன. பல தாலுகா, மாவட்டப் பஞ்சாயத்து போர்டுகள் தென்னை, பனை மரங்களைக் கள்ளிறக்கக் குத்தகைக்கு விடுவதில்லை எனத் தீர்மானம் இயற்றி இலாபத்தைப் புறக்கணித்தன. காந்தி தொடங்கி வைத்த மதுவிலக்குப் போராட்டத்தின் விளைவாக கிராமங்களில் மது குடிப்பவர்களை புறக்கணிப்பதும் நடந்தேறியது.

நாடுகள் வாரியாக மதுவிலக்கு

தொகு

இந்தியா

தொகு

இந்தியாவில், தமிழ்நாடு மதுவிலக்குக் கொள்கையைக் கைவிட்டு அரசே மதுவிற்பனை செய்யும் மாநிலமாகவும், கேரளா மதுவிலக்கை நோக்கி முன்னேற முயலும் மாநிலமாகவும்,[1] குஜராத்,[2] பீகார்[3] மதுவிலக்குக் கொள்கை கொண்ட மாநிலங்களாகவும் உள்ளன.

தமிழ்நாடு

தொகு

இதையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.dinamalar.com/news_detail.asp?id=1051808
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-08. Retrieved 2014-09-22.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-20. Retrieved 2016-05-01.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுவிலக்கு&oldid=3778304" இலிருந்து மீள்விக்கப்பட்டது