தமிழ்நாட்டில் மதுவிலக்கு

தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுவிலக்கு குறித்த மாநில அரசின் கொள்கையைக் குறிப்பதாகும். தமிழ்நாட்டில் மதுவிலக்குக் கொள்கையானது வருவாயைக் கருத்திற் கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக அரசுகளால் கையாளப்பட்டு வருகின்றது. இந்தியா விடுதலை பெற்று முதல் 23 ஆண்டுகாலம் தமிழகத்தில் மதுவிலக்கு நடப்பில் இருந்தது.

பின்னணி

தொகு

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கு எதிராக, 1930ஆம் ஆண்டில் இந்தியாவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி மகாத்மா காந்தி அறிவித்த சாராயம் மற்றும் கள்ளுக் கடை மறியல் போராட்டங்களின் விளைவாக அன்றைய சென்னை மாகாணத்தில் 9000 சாராயக் கடைகளை ஏலம் எடுக்க ஆளின்றி 6000க்கு மேற்பட்டவை அடைக்கப்பட்டன. பல தாலுகா, மாவட்டப் பஞ்சாயத்து போர்டுகள் தென்னை, பனை மரங்களைக் கள்ளிறக்கக் குத்தகைக்கு விடுவதில்லை எனத் தீர்மானம் இயற்றி இலாபத்தைப் புறக்கணித்தன. காந்தி தொடங்கி வைத்த மதுவிலக்குப் போராட்டத்தின் விளைவாக கிராமங்களில் மது குடிப்பவர்களை புறக்கணிப்பதும் நடந்தேறியது.

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்கு அமலில் இருந்து வந்துள்ளது. முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின் காங்கிரசு அரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. அன்றிலிருந்து 2001 வரை, 1971–74, 1983–87, 1990–91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர தமிழ்நாட்டில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா, வைன் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளும் கள், சாராயம் போன்ற உள்நாட்டு மதுவகைகளும் தடை செய்யப்பட்டிருந்தன.

மதுவிலக்கு தளர்த்தப்படல்

தொகு

1971-1972ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது ஆகஸ்டு 30,1971 அன்றுமுதல் தமிழகத்தில் மதுவிலக்கு தளர்த்தப்படும் என்று அப்போது ஆட்சியிலிருந்த திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் 1974 இல் திமுக அரசு மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமுல்படுத்தியது.[1].

1981 இல் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நீக்கிய எம். ஜி. இராமச்சந்திரன் தலைமையிலான அரசு 1987 இன் துவக்கத்தில் சாராயம் மற்றும் கள் கடைகளை மூடச் செய்தது. மதுவிலக்கு அமுலில் இருந்த காலகட்டங்களில் கள்ளச் சாராய வியாபாரம் அதிகரித்து, கள்ளச் சாராயத்தைக் குடித்ததால் அதிகளவில் தமிழக மக்கள் உயிரிழந்தனர். மெத்தனாலை அருந்தியதால் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், 1990 முதல் நெகிழி உறைகளில் மலிவு விலை மது விற்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. ஜெயலிலிதா ஆட்சிக்கு வந்த பிறகு 1991 சூலை 16 இல் மலிவு விலை மதுவை தடைசெய்தது. தொடர்ந்து கள்ளச் சாராயம் பெருகியதால் பலர் உயிரிழந்தனர். அயல்நாட்டு மதுவகைகள் விற்கும் கடைகள் தனியார் வசம் இருந்து வந்ததை மாற்றி அக்கடைகளை 2001 இல் அரசு நிறுவனமான டாஸ்மாக் வசம் கொண்டுவந்தார்.[2]

தமிழ்நாடு வாணிபக் கழகம்

தொகு

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், 1983 ஆம் ஆண்டு எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. நவம்பர் 29, 2003 முதல் இந்நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நடத்தப்பட்டுவருகிறது.

அக்டோபர் 2003 இல் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937 இல் செய்யப்பட்டத் திருத்தத்தின் மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு மாநிலம் முழுவதும் மது விற்பனையின் தனியுரிமை அளிக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசால் செய்யப்பட்ட இம்மாற்றம் நவம்பர் 29, 2003 இல் அமலுக்கு வந்தது. தொடக்கத்தில் திமுக இதை எதிர்த்தாலும், 2006 ஆம் ஆண்டு மு.கருணாநிதி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் ஏகபோக மது விற்பனையால் அரசுக்கு அதிகமான வருவாய் கிட்டியதால் இம்முடிவை மாற்ற விருப்பமின்றி தொடர்ந்து செயற்படுத்தியது. இதன் பின்னர் 2011 இல் பதவிக்கு வந்த அதிமுக அரசும் இதனைத் தொடர்ந்ததால், மது விற்பனையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் தனியுரிமை தொடர்கிறது.[3][4][5][6][7]

மதுவிலக்கு ஆதரவு போராட்டங்கள்

தொகு

தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமுலில் இல்லாததால் மக்களிடையே குடிப்பழக்கம் பெருகி அவர்களது உடல் நலமும் வாழ்க்கையும் சீர்கெடுவதாக சில அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.[8] இந்திய அரசியல் சாசனம் 47ம் பிரிவின்படி, போதைப் பொருட்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும்; ஆனால் அதற்கு முரணாக மதுபானத்தை அரசே விற்பனை செய்வதைத் தடைசெய்யக்கோரி டிராபிக் இராமசாமி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரிக்க தகுதியற்றது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[9] தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இத்தகைய மதுபானக்கடைகளில் மது அருந்திவிட்டு தகராறு செய்வோரின் தொல்லை பொறுக்காமல் அவ்வப்பகுதி பெண்களே டாஸ்மாக் கடைகள் மீது முட்டை வீசுதல், அடித்து நொறுக்குதல், சாலைமறியல் செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.[10][11][12][13]

அதிக அளவில் சாலை விபத்து நடப்பதற்குக் காரணமாக டாஸ்மாக் கடைகள் இருப்பதால், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை நீக்கச் சொல்லி மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் 15 ஆண்டுகளுக்கு மேலாகச் சொல்லிவந்தும் தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 2013 ஆம் ஆண்டு மார்ச்சு 31 ஆம் தேதிக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 டாஸ்மாக் கடைகளையும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500க்கு மேற்பட்ட கடைகளையும் நீக்கக் கூறி உயர் நீதிமன்றம் கெடுவிதித்தது. எனினும் தமிழக அரசு அனைத்துக் கடைகளையும் மூடவில்லை.[14][15]

தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டுவரப்படாததைக் கண்டித்து காந்தியவாதியான சசிபெருமாள் சூலை 31, 2015 அன்று தொலைபேசிக் கோபுரத்தின் மீது ஏறி நடத்திய போராட்டத்தில் உயிரிழந்தார்.[16]. அவரது மரணத்தின் எதிரொலியாக மதுபானக் கடைகளை அடைக்கக்கோரி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், கடையடைப்புப் போராட்டம், டாஸ்மாக் மதுக்கடைகள் மீதான வன்முறைத் தாக்குதல்களெனப் போராட்டங்கள் வலுப்பெற்றன.[17][18][19][20][21][22].

2017 ஏப்ரலில் திருப்பூர் அருகே முதலிபாளையம் ஊராட்சி சிட்கோ பஸ் நிறுத்தம் அருகில் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடை - எண் 2307ஐ முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய மக்கள், மதுபான கூடத்தை அடித்து நொறுக்கினர் .[23]

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

திமுக, பாமக, மக்கள் நல கூட்டணி கட்சிகள் தங்களது 2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தாங்கள் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படுமென அறிவித்தன.[24][25][26]. ஆனால் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் முழுமையான மதுவிலக்கு உடனடியாக சாத்தியமானது இல்லை; மதுவிலக்கு படிப்படியாகக் கொண்டுவரப்படும் என அறிவித்தது[27]. தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்றதும் 24 மே, 2016 அன்று 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அரசாணையிலும், மதுக்கடைகளை காலை 10 மணிக்குப் பதில் நண்பகல் 12 மணிக்கு திறப்பதற்கான அரசாணையிலும் கையெழுத்திட்டார். இதன் காரணமாக, இக்கடைகளின் வணிக நேரம் 12 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக குறைக்கப்பட்டது.[28]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Nadu's experiments with liquor ban". தி இந்து. 11 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "பூரண மதுவிலக்கு சாத்தியமா?". Hindu Tamil Thisai. 2024-09-30. பார்க்கப்பட்ட நாள் 2024-10-01.
  3. Subramanian, T. S. "Deadly concoctions". Frontline. Archived from the original on 23 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
  4. Anand, S. "Rotgut Blues". Outlook. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
  5. "TASMAC, coops alone to retail trade IMFL in TN". பிசினஸ் ஸ்டாண்டர்ட். பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
  6. Ramesh, Niranjana. "Politics influences DMK on disinvestment in central PSUs". Economic Times. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
  7. Nambath, Suresh. "A dangerous mix". The Hindu. Archived from the original on 6 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. People are poor as they spend on liquor: PMK's Ramadoss[தொடர்பிழந்த இணைப்பு]
  9. [dinamani.com/edition/story.aspx?artid=609091&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest "டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு : டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி"]. 05 மே 2012. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |date= (help); Unknown parameter |name= ignored (help)
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-30. பார்க்கப்பட்ட நாள் 2016-05-24.
  11. http://www.dinamalar.com/news_detail.asp?id=726825&Print=1
  12. http://www.dinamani.com/edition_coimbatore/tirupur/2013/08/23/மதுப்-பிரியர்களால்-பெண்கள்-/article1747720.ece
  13. http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=106908[தொடர்பிழந்த இணைப்பு]
  14. Relocate highway liquor shops by March 31, says court
  15. Shifting of TASMAC outlet to residential area flayed
  16. "மதுவுக்கு எதிராக குரல் கொடுத்த காந்தியவாதி சசிபெருமாள் மரணம்: செல்போன் கோபுரத்தில் ஏறி போராடியபோது பரிதாபம்". தி இந்து. 31 சூலை 2015. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article7485298.ece. பார்த்த நாள்: 5 ஆகஸ்ட் 2015. 
  17. மதுக் கடைகளை மூடக் கோரி போராட்டம்
  18. மதுக் கடைகளை மூடக் கோரி போராட்டம்: 4,500 பேர் கைது
  19. "மதுவுக்கு எதிராக போராடும் மாணவிக்கு வீட்டுச் சிறை". தி இந்து. 5 ஆகஸ்ட் 2015. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/article7502090.ece. பார்த்த நாள்: 5 ஆகஸ்ட் 2015. 
  20. "சேலம் மதுக்கடைக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு: ஊழியர் பலி". தி இந்து. 5 ஆகஸ்ட் 2015. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/article7502311.ece. பார்த்த நாள்: 5 ஆகஸ்ட் 2015. 
  21. "கோவன் கைதுக்கு தலைவர்கள் கண்டனம்; அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு". தி இந்து. 31 அக்டோபர் 2015. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7826602.ece?homepage=true. பார்த்த நாள்: 31 அக்டோபர் 2015. 
  22. "More Tasmac shops come under attack". தி இந்து. 4 ஆகஸ்ட் 2015. http://www.thehindu.com/todays-paper/more-tasmac-shops-come-under-attack/article7497349.ece. பார்த்த நாள்: 5 ஆகஸ்ட் 2015. 
  23. "திருப்பூர் அருகே மக்கள் ஆவேசம்: மதுக்கடை சூறை". பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  24. திமுக தேர்தல் அறிக்கை 2016 - முக்கிய அம்சங்கள்
  25. LIQUOR FREE TN
  26. வீட்டுக்கு ஒரு பெண் பட்டதாரிக்கு அரசு வேலை: மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
  27. Highlights of AIADMK manifesto
  28. "Jayalalithaa orders 500 liquor shops closed". தி இந்து. 23 மே 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-cm-jayalalithaa-signs-a-file-reducing-business-hours-of-liquor-shops/article8636392.ece?homepage=true?w=alstates. பார்த்த நாள்: 24 மே 2016. 

உசாத்துணை

தொகு