சசூஸ்வெலெய்

சசூஸ்வெலெய் (Sossusvlei), நமீபியா நாட்டில் உள்ள நமீப் பாலைவனத்தில் உள்ள நமீப்-நௌக்ல்லுப்ட் தேசியப் பூங்கா [1] மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலரோத்தில் அமைந்த உயரமான செம்மணல் திட்டுக்களைக் குறிப்பதாகும். உவர்ப்புத் தன்மை கொண்ட வறண்ட ஏரிகளில் இம்மணல் திட்டுகள் அமைந்துள்ளது.[2] இது வறண்ட சௌசப் ஆற்றின் கழிமுகத்தில் அமைந்துள்ளது. இதுவே உலகின் ஒரே கடலோரப் பாலைவனமாகும் ஆகும். இச்செம்மணல் திட்டுகள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. இம்மணல் திட்டுகளும், அட்லாண்டிக் பெருங்கடல் சந்திக்கும் கடற்கரைகளில் கடற் சிங்கங்கள் ஓய்வு எடுக்க வருகிறது.

சசூஸ்ல்வெலெய் உச்சரிப்பு
சசூஸ்வெலெய் மணல் திட்டுகள்
சசூஸ்வெலெயின் வான்பரப்புக் காட்சி
மணல் திட்டு எண் 45

சசூஸ்வெலெயின் மறைந்த சதுப்பு நிலத்தில்[3]அமைந்த செம்மணல் திட்டுகளில் மிகவும் உயரமானது பிக் டாடி (Big Daddy) ஆகும். இது சராசரி 325 மீட்டர் உயரம் கொண்டது. மற்ற செம்மணல் திட்டுகள் பிக் மம்மி, எலிம் மணல் திட்டு மணல் திட்டு 7 மற்றும் மணல் திட்டு 45 ஆகும்.

அமைவிடம்

தொகு

இது நமீபியாவின் தலைநகரான விந்தோக் நகரத்திற்கு தென்கிழக்கே 363.6 கிலோ மீட்டர் தொலைவிலும்; நமீப்-நௌக்ல்லுப்ட் தேசியப் பூங்காவிற்கு தென்கிழக்கில் 304.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தட்ப வெப்பம்

தொகு

சசூஸ்வெலெய் மணல் திட்டுப் பகுதிகள் கடினமான பாலைவன தட்ப வெப்பத்தை கொண்டுள்ளது. குளிர்காலத்தில் சராசரி வெப்பம் 24 °C மற்றும் இரவில் 10 °C வெப்பமும்; கோடைக்கால வெப்பம் 40 °C வரையிலும் செல்கிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், சசூஸ்வெலெய், நமீபியா (2010–2017 சராசரி)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 40.6
(105.1)
39.8
(103.6)
36.8
(98.2)
37.0
(98.6)
34.7
(94.5)
29.8
(85.6)
29.9
(85.8)
35.8
(96.4)
38.5
(101.3)
40.1
(104.2)
40.5
(104.9)
40.1
(104.2)
40.6
(105.1)
உயர் சராசரி °C (°F) 33.2
(91.8)
34.5
(94.1)
34.2
(93.6)
31.4
(88.5)
29.1
(84.4)
25.7
(78.3)
25.3
(77.5)
28.1
(82.6)
30.7
(87.3)
32.9
(91.2)
33.5
(92.3)
34.1
(93.4)
34.5
(94.1)
தினசரி சராசரி °C (°F) 25.4
(77.7)
26.7
(80.1)
26.7
(80.1)
23.4
(74.1)
20.7
(69.3)
16.5
(61.7)
16.9
(62.4)
18.4
(65.1)
21.8
(71.2)
23.9
(75)
25.2
(77.4)
25.5
(77.9)
22.6
(72.7)
தாழ் சராசரி °C (°F) 17.2
(63)
19.1
(66.4)
20.2
(68.4)
15.3
(59.5)
12.3
(54.1)
7.9
(46.2)
8.4
(47.1)
8.6
(47.5)
12.0
(53.6)
13.6
(56.5)
15.5
(59.9)
15.8
(60.4)
7.9
(46.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) 7.6
(45.7)
11.1
(52)
14.9
(58.8)
5.6
(42.1)
0.6
(33.1)
-2.3
(27.9)
-2.3
(27.9)
-1.8
(28.8)
1.7
(35.1)
4.4
(39.9)
5.2
(41.4)
0
(32)
−2.3
(27.9)
பொழிவு mm (inches) 14.9
(0.587)
16.1
(0.634)
39.6
(1.559)
8.9
(0.35)
13.2
(0.52)
0.8
(0.031)
0.1
(0.004)
1.2
(0.047)
2.6
(0.102)
1.4
(0.055)
0.8
(0.031)
4.1
(0.161)
104
(4.09)
ஆதாரம்: [4]

படக்காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Namib-Naukluft National Park
  2. "Deadvlei". Atlasobscura.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-26.
  3. Deadvlei
  4. "Monthly reports / Namib Desert (Reference period 2010−2018)". Namib Desert (Sesriem): Namibia Weather Network. 20 February 2018. பார்க்கப்பட்ட நாள் 20 February 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசூஸ்வெலெய்&oldid=4128285" இலிருந்து மீள்விக்கப்பட்டது