சஞ்சய் பந்தோபாத்யாய்

சஞ்சோய் பந்தோபாத்யாய் (Sanjoy Bandopadhyay) (பிறப்பு: செப்டம்பர் 16, 1954) ஒரு பெங்காலி இந்திய பாரம்பரிய இசைக் கருவியான சித்தார் கலைஞராவார். இவர் முதன்மையாக ராதிகா மோகன் மைத்ரா, பீமலெந்து முகர்ஜி ஆகியோரின் சீடராவார்.

சஞ்சய் பந்தோபாத்யாய்
பேராசிரியர் சஞ்சய் பந்தோபாத்யாய்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சஞ்சய் பந்தோபாத்யாய்
பிற பெயர்கள்சஞ்சய் பேனர்ஜி
பிறப்பு16 செப்டம்பர் 1954 (1954-09-16) (அகவை 69)
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், சித்தார் கலைஞர், கல்வியாளர்
இணையதளம்http://www.sanjoybandopadhyay.com/

தொழில் தொகு

இந்தியாவின் கொல்கத்தா இரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் கருவியிசைத் துறையில் தலைவர் பேராசிரியர் (உஸ்தாத் அலாவுதீன் கான் இருக்கை) ஆவார். எஸ்.எம். தாகூர் ஆவணமாக்கல் மற்றும் மொழி மற்றும் காலாவதியான இசைக்கருவிகள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் உள்ளார். [1] காலாவதியான இசைக்கருவிகள் மூலம் உலகின் இனவியல் வரைபடத்திற்காக இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் உலகம் முழுவதிலுமிருந்து வரும் அறிஞர்களின் ஆதரவோடு இயங்கும். 

ஜார்ஜ் ஏ. மில்லர் வருகை பேராசிரியராக பண்டோபாத்யாய் அக்டோபர் 2005 இல் அர்பானா-சாம்பேனில் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அதே ஆண்டில் இவர் கனடாவின் எட்மண்டன் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்திற்கும், இவர் 2008 இல் கொலராடோ பல்கலைக்கழகத்திற்கும், 2009 இல் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கும் சென்றுள்ளார். ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் (2008) நடந்த சர்வதேச மாநாட்டில் [2] ஒரு கட்டுரையை வழங்க இவர் சிறப்பு அழைப்பாளாராக அழைக்கப்பட்டார்.

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_பந்தோபாத்யாய்&oldid=3791469" இலிருந்து மீள்விக்கப்பட்டது