சஞ்சய குமார் மிசுரா

சஞ்சய குமார் மிசுரா (Sanjaya Kumar Mishra)(பிறப்பு 29 டிசம்பர் 1961) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, உத்தராகண்டு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பில் உள்ளார்.[1] இவர் ஒரிசா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.

சஞ்சய குமார் மிசுரா
பொறுப்பு, தலைமை நீதிபதி, உத்தராகண்டு உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 திசம்பர் 2021
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி, உத்தராகண்டு உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 அக்டோபர் 2021
பரிந்துரைப்புஎன். வி. இரமணா
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி, ஒரிசா உயர் நீதிமன்றம்
பதவியில்
7 அக்டோபர் 2009 – 10 அக்டோபர் 2021
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதிபா பாட்டீல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 திசம்பர் 1961 (1961-12-29) (அகவை 62)
பாலாங்கிர், ஒடிசா
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்

இளமை தொகு

ஸ்ரீமார்க்கண்ட மிசுரா மற்றும் ஸ்ரீமதி. ஜோதிர்மயி மிசுரா ஆகியோரின் மகனாக ஒடிசா மாநிலம் பாலாங்கிரில் திசம்பர் 29, 1961-ல் பிறந்தார். திக்ரா மேல்நிலை துவக்கப் பள்ளியில், பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டு போலங்கிரில் உள்ள பிருத்விராஜ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைச் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1982ல் போலங்கிரில் உள்ள இராஜேந்திரா கல்லூரியில் இளநிலை வணிகவியல் முடித்தார். வணிகவியலில் முதுநிலைப் பட்டத்தினை 1984-ல் தில்லி பல்கலைக்கழகத்தில் முடித்த இவர், இளநிலை சட்டப் பட்டத்தினையும் இதே பல்கலைக்கழகத்திலிருந்து 1987-ல் முடித்தார்.[2]

வழக்கறிஞர் பணி தொகு

மார்ச் 1988 முதல் வழக்கறிஞராகப் பணியில் மிசுரா சேர்ந்தார். இவரது தந்தை ஸ்ரீமார்க்கண்ட மிசுராவின் வழிகாட்டுதலின் கீழ் போலங்கிர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். போலங்கிர் சட்டக் கல்லூரியின் கௌரவ சட்ட விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

நீதிபதி பணி தொகு

மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று 16 பிப்ரவரி 1999-ல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக, ஜெய்ப்பூரில் சேர்ந்தார். மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, சுந்தர்கர், தேன்கனல், சிறப்பு நீதிபதி, புவனேசுவரம் மற்றும் ஒரிசா உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் உட்படப் பல பதவிகளில் பதவி பணியாற்றி 2009ஆம் ஆண்டு அக்டோபர் 07ஆம் நாள் ஒரிசா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். தற்பொழுது உத்தராகாண்டு நீதிமன்ற நீதிபதியா சேர்ந்து,[3] தற்பொழுது தலைமை நீதிபதியாக 2021ஆம் ஆண்டு திசம்பர் 24 முதல் பணியாற்றி வருகிறார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Tiwari, Anadi. "Justice Sanjaya Kumar Mishra assumes charge as acting Chief Justice of Uttarakhand High Court". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-02.
  2. "Odisha-born Justice Sanjaya Kumar Mishra appointed Acting Chief Justice of Uttarakhand High Court". KalingaTV (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-22. பார்க்கப்பட்ட நாள் 2022-04-02.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "Judge". orissahighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-04-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய_குமார்_மிசுரா&oldid=3599762" இலிருந்து மீள்விக்கப்பட்டது