சஞ்சீவ் ஆர்யா
சஞ்சீவ் ஆர்யா (Sanjiv Arya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் 4 ஆவது உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நைனிடால் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] [2] [3] [4]
சஞ்சீவ் ஆர்யா Sanjiv Arya | |
---|---|
உத்தராகண்டச் சட்டமன்றம் | |
பதவியில் 2017–2022 | |
முன்னையவர் | சரிதா ஆர்யா |
பின்னவர் | சரிதா ஆர்யா |
தொகுதி | நைனிட்டால் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் | இயசுபால் ஆர்யா |
முன்னாள் கல்லூரி | பி.காம்,. எம்.பி.ஏ., |
உத்தரகாண்ட் சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் இயசுபால் ஆர்யாவின் மகனாகவும் அறியப்படுகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, அப்போதைய பாரதிய சனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் சா முன்னிலையில் தந்தை-மகன் இருவரும் பாரதிய சனதா கட்சியில் இணைந்தனர். [5]
11 அக்டோபர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதியன்று தில்லியில் கட்சித் தலைவர்களான அரிசு இராவத், ரன்தீப் சுர்ச்சேவாலா மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் சஞ்சீவ் மற்றும் இவரது தந்தை இருவரும் காங்கிரசு கட்சியில் இணைந்தனர். [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nainital Election Results 2017 Live: Sanjeev Arya From BJP Wins". News18. 11 March 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
- ↑ "Sanjeev Arya(Bharatiya Janata Party(BJP)):Constituency- NAINITAL(SC)(NAINITAL) - Affidavit Information of Candidate". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
- ↑ "2017 Nainital - Uttarakhand Assembly Election Winner, LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
- ↑ Shalini Lobo (January 30, 2017). "Uttarakhand Assembly polls: Senior Congress leader Yashpal Arya, son Sanjeev Arya join BJP". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
- ↑ "Uttarakhand: Senior Congress leader Yashpal Arya joins BJP". The Indian Express (in ஆங்கிலம்). 2017-01-16. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.
- ↑ "Uttarakhand minister, MLA son leave BJP, join Cong". The Indian Express (in ஆங்கிலம்). 2021-10-12. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.