சட்டவாக்க அவை
(சட்டவாக்கத்துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒரு நாட்டின் சட்டவாக்க அவை அல்லது சட்டவாக்க சபை (legislature) என்பது, சட்டங்களை ஆக்குவதற்கும், அவற்றைத் திருத்துவதற்கும், நீக்குவதற்குமான அதிகாரம் கொண்ட ஒரு வகைக் கலந்தாய்வு அவை ஆகும். சட்டவாக்க அவைகள் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பொதுவான பெயர்களாக நாடாளுமன்றம், காங்கிரசு என்பவற்றைக் குறிப்பிடலாம். நாடாளுமன்ற முறையைக் கைக்கொள்ளும் நாடுகளில் சட்டவாக்க அவை மேன்மையான அதிகாரம் கொண்டது. இச் சபையிலிருந்தே தலைமை நிறைவேற்றுனராகச் செயல்படும் பிரதம அமைச்சர் தெரிவுசெய்யப்படுகிறார். சமூகத்திற்குத் தேவையான விடயங்களை விவாதிப்பது இதன் முக்கிய பணிகளுள் ஒன்றாகும்.[1]
சான்றுகள்
தொகு- ↑ Hague, Rod, author. (14 October 2017). Political science : a comparative introduction. pp. 128–130. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-137-60123-0. இணையக் கணினி நூலக மைய எண் 961119208.
{{cite book}}
:|last=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)