சதர் (திருவிழா)

சதர் ( sadar ) என்பது தீபாவளியின் ஒரு பகுதியாக இந்தியாவின் தெலுங்கானாவில் , ஹைதராபாத்தில் உள்ள யாதவர் சமூகத்தால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் எருமை திருவிழா ஆகும்.இது Dunnapothula panduga ( துன்னபொதுல பண்டிகை ) என்றும் அழைக்கப்படுகிறது (தெலுங்கில் எருமை மாடுகளின் திருவிழா) மற்றும் இது தீபாவளிக்கு அடுத்த இரண்டாவது நாளில் நடைபெறும் .

சதர்
கடைபிடிப்போர்யாதவர் சமூகதம் ஹைதராபாத் , இந்தியா
வகைகலாச்சாரம்
அனுசரிப்புகள்எருமை திருவிழா
நாள்தீபாவளி பண்டிகையை தொடர்ந்து இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை
நிகழ்வுவருடம்
சலந்திரி நியாயம் சௌத்ரி மல்லையா யாதவ் (சதர் நிறுவனர்)

எருமை மாடுகள் பலவிதமான வண்ண மலர்களால் தொடுக்கபட்ட மாலைகளால் அணிவிக்கப்பட்டு , வர்ணம் பூசப்பட்ட கொம்புகளால் அலங்கரிக்கப்பட்டு, தெருக்களில் அணிவகுத்துச் செல்லப்படுகின்றன, பெரும்பாலும் டீன் மார் சிறப்பு யாதவ இசைக்கு (டா டானிகி) கூட்டத்துடன் நடனமாடுகின்றன. எருமை மாடுகள் சில நேரங்களில் தங்கள் பின்னங்கால்களை உயர்த்த ஊக்குவிக்கப்படுகின்றன.

சதர் பண்டிகையானது , மறைந்த ஸ்ரீ சலந்திரி நியாயம் சௌத்ரி மல்லையா யாதவ் அவர்களால் 1946 ஆம் ஆண்டு ஹைதராபாத் நரியங்குடா YMCAவில் தொடங்கப்பட்டது. காலப்போக்கில் ஹைதராபாத்தில் பல இடங்களில் சதர்கள் அந்தந்த சௌத்ரியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், நாராயண்குடா YMCA சதர் (ரெட்டி மகளிர் கல்லூரிக்கு அருகில்) தான் அதிக மக்கள் கூட்டத்தை கொண்டு நடைபெற்ற விழாவாக பிரபலமானது. எனவே அந்த நிகழ்வு பேதா சதர் என்று அழைக்கப்படுகிறது. நாராயண்குடா YMCA சதர் 1946 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை அதன் நிறுவனர் மறைந்த ஸ்ரீ சலந்திரி நியாயம் சௌத்ரி மல்லையா யாதவ் மற்றும் அவருக்கு பின்னர் அவரது குடும்ப உறுப்பினர்களால் ஆண்டுதோறும் தடையின்றி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது .

சதர் நடைபெறும் மற்ற குறிப்பிடத்தக்க இடங்கள் தீபக் டாக்கீஸ், சைதாபாத், அமீர்பேட்டை மற்றும் கைர்தாபாத். சதரின் புகழ் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இன்னும் பல புதிய புதிய இடங்களில் நடைபெற்று வருகின்றது , ஆனால் மேலே உள்ளவை நீண்ட காலமாகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் உள்ளன.

சொற்பிறப்பியல், இருப்பிடங்கள் மற்றும் தேதிகள் தொகு

சொற்பிறப்பியல் தொகு

சதர் என்ற சொல்லுக்கு முக்கிய கூட்டம் என்று பொருள். [1] நாராயண்குடா YMCA வில் நடக்கும் சதர் கூட்டம் எல்லாவற்றிலும் மிகப்பெரிய கூட்டம். [2] [3]

இடங்கள் தொகு

  • நரியங்குடா YMCA சதர் - ரெட்டி மகளிர் கல்லூரி அருகில்
  • ஷேக்பேட்-தர்கா சதர்
  • தீபக் டாக்கீஸ் சதர் - தீபக் டாக்கீஸ் அருகில், நாராயண்குடா
  • சைதாபாத் சதர்
  • கைர்தாபாத் சதர்
  • அமீர்பேட்டை சதர்
  • கர்வான் சதர்
  • பேகம் பஜார்
  • லாங்கர் ஹவுஸ் சதர்

தேதிகள் தொகு

நாராயண்குடா YMCA சதார் ஐதராபாத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு 2 நாட்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள யாதவ் சமூகத்தினரின் 5-நாள் தீபாவளி கொண்டாட்டத்தின் கடைசி நாள் இது.

இது மற்ற இடங்களில் தீபாவளி நாளிலோ அல்லது தீபாவளிக்குப் பிறகு ஒரு நாளிலோ நடத்தப்படுகிறது, இதனால் அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் 3வது நாளில் (தீபாவளிக்குப் பிறகு 2 நாட்கள்) நாராயண்குடா YMCA வில் நடைபெறும் பேதா சதரில் கலந்து கொள்ளலாம் மற்றும் யாதவர்களின் மிகப்பெரிய கூட்டத்தில் பங்கேற்கலாம்.

கோ பூஜை தொகு

சதர் திருவிழா கோ பூஜை செய்யும் சௌத்ரியுடன் தொடங்குகிறது

கோ பூஜை தொகு

கோவர்தன் பூஜையின் வகைகளில் இதுவும் ஒன்று. இந்த சடங்கின் ஒருபகுதியாக , லக்ஷ்மிதேவி பூஜை(லக்ஷ்மி பூஜை) ஒரு மலை போன்ற அலங்காரத்தை , அதாவது மாட்டு சாணத்தை முதலில் பரப்பி, பின்னர் அதன்மீது ரங்கோலி கோலமிட்டு அலங்கரிக்கபட்டு , கடைசியாக அரிசி, இனிப்பு மிட்டாய் மற்றும் அலங்கரிக்கப்பட்ட பானைகளால் மேலே அழகுபடுத்தப்படும் . இந்த கட்டமைப்பை முடித்த பிறகு, ஒரு மண் விளக்கு (தியா) மேல் வைக்கப்படுகிறது. இது கோவர்தன் மலையை குறிக்கிறது.

 
யாதவ் சவுத்ரி கோ பூஜை செய்து வருகிறார்

திருவிழா தொடங்குதல் தொகு

பூஜை முடிந்ததும், ஊர்வலத்தில் வரும் முதல் ஆண் எருமை மாடுகளைக் அழைத்து வந்து, தீபத்தின் மீது மிதிக்க வைக்கப்படும். இது சதர் திருவிழாவின் அதிகாரப்பூர்வ தொடக்கமாகும்.

 
எருமை ஸ்டாம்ப்ஸ் தியா க்ளோசப்
 
சடாரில் தியாவை எருமை ஸ்டாம்ப்ஸ் செய்கிறது

இதனுடன், சதர் திருவிழாவின் ஊர்வலம் தொடங்குகிறது, மேலும் ஒவ்வொரு குடும்பமும் தங்களின் அலங்கரிக்கபட்ட துன்னப்பொதுலுடன் (ஆண் எருமை) வரிசையாக ஆரவாரத்துடன் வருகிறார்கள்.

திருவிழாவின் சிறப்பம்சங்கள் தொகு

எருமைகள் அணிவகுப்பின் முக்கிய சிறப்பம்சமாகும், ஏனெனில் சமூகம் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கால்நடைகளை நம்பியிருக்கிறது. முக்கியமாக நீர் எருமைகள் மற்றும் பசுக்களைக் கொண்ட கால்நடைகளை வளர்ப்பதில் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். ஆண் எருமை மாடுகள் முக்கியமாக பெரிய உயரம், எடை மற்றும் உடலின் நீளத்திற்காக வளர்க்கப்படுகின்றன. மேலும் அவற்றை சார்ந்த பெண் எருமை மாடுகளானது அவைகள் தருகின்ற பால் அளவு மூலம் அவை சிறந்ததாகக் கருதப்படுகின்றன. அதுமட்டுமின்றி மேற்கண்ட இரண்டு வகைகளிலும் தோற்றம், வயது, கொம்பு நடை, வால் நீளம் போன்ற பிற விவரங்கள் சிறப்பாக கருதப்படுகின்றன. எனவே சதர் இந்த சிறப்பு காளைகளை மற்ற சமூகத்திற்கு காட்சிப்படுத்த இந்த நிகழ்வானது ஒரு வாய்ப்பாக அமைக்கின்றது .

எருமை அலங்காரம் தொகு

ஒவ்வொரு குடும்பமும் தங்கள் சிறந்த ஆண் எருமைகளை அணிவகுப்பில் மற்ற சமூகத்தினருக்கு காட்சிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றன. எருமைகளை எண்ணெய் தடவி, அவற்றின் கொம்புகள் மற்றும் உடலில் பளிச்சென்ற பல வண்ணங்கள் பூசி, கழுத்தில் வண்ண மாலைகள், கால்களில் கணுக்கால் (கஜ்ஜாலு), கழுத்து அல்லது நெற்றியில் மணிகள் கொண்ட கடல் ஓடுகளால் அலங்கரிக்கபட்ட பட்டைகள் மற்றும் கொம்புகளில் மயில் இறகுகளை கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன. . [4]

 
சதர் திருவிழாவிற்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு எருமை
 
அலங்கரிக்கப்பட்ட எருமை காளை

எருமை வணக்கம் தொகு

சில குடும்பங்கள் சௌத்ரிக்கு மரியாதை செய்தல் மற்றும் கீழ்ப்படிதலைக் காட்டுவதற்காக சலாம் (பின்னங்கால்களில் மட்டுமே நின்று முன் இரண்டு கால்களை கூப்பி வணங்குவது) மற்றும் தண்டம்(முன்னங்கால்களை மடக்கி குனிந்து வணங்குவது) செய்ய தங்கள் எருமைகளை பழக்கப்படுத்துகின்றனர் . இந்த இரண்டு வகையான வணக்கங்களைச் செய்ய குடும்பங்கள் தங்கள் எருமைகளுக்கு மாதக்கணக்கில் பயிற்சி அளிக்கின்றனர். இறுதியில் அது எருமைகளின் பின்னங்கால்களில் தனித்து நிற்கும் சுறுசுறுப்பைக் காட்டுகிறது.

 
எருமை தண்டம்- எருமை முன் கால்களை மடக்கி குனிந்து கும்பிடுவது.
 
எருமை வணக்கம் - எருமை வணக்கம் சொல்வது போல் பின்னங்கால்களில் நிற்க வைக்கப்படுகிறது

அலை பாலை தொகு

அனைத்து சமூகத்தினரும் ஒருவருக்கு ஒருவர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு அலை பாலை எடுத்துக் கொள்கின்றனர். அலை பாலை என்பது மற்றொரு நபரை தோள்களின் இருபுறமும் கட்டிப்பிடித்து தன் அன்பை வெளிபடுத்ததும் ஒரு முறையாகும்.

டா-டான்-கி இசை ஒலித்தல் தொகு

இந்த திருவிழாவின் மற்றொரு சிறப்பம்சம் யாதவர்கள் தா-டான்-கி எனப்படும் தனித்துவமான இசை ஒலியை அணிவகுப்பின் போது வாசிப்பது. இந்த ராகம் மிகவும் தனித்துவமானது மற்றும் யாதவர்களுக்காக அமைக்கபட்டது , இப்போது இது சிறப்பாக யாதவர் இசை என்று அழைக்கப்படுகிறது. இந்த இசை யாதவர்களால் ஆடும் சிறப்பு படி நடனத்துடன் தொடர்புடையது. இந்த நடனத்தில், ஆண்கள் ஒரு கையில் ஹாக்கி ஸ்டிக்கைப் பிடித்துக்கொண்டு, முன்னும் பின்னுமாக பெரிய அடிகளை எடுத்துக்கொண்டு, ஒரே நேரத்தில் சுற்றிச் சுற்றி வட்டமிடுவார்கள். இந்த நடனம் 'பெதா புலி ஆடா' என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது புலி நடனம் என்று அழைக்கப்படுகிறது, இது ஆண்கள் புலியின் நடை மற்றும் அசைவுகளை பின்பற்றுவது போல் தெரிகிறது. அதேபோல் இந்த நடனம் பொதுவாக யாதவ் நடனம் என்று அழைக்கப்படுகிறது.

தொடர்புடைய ஆதாரங்கள் தொகு

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதர்_(திருவிழா)&oldid=3685714" இருந்து மீள்விக்கப்பட்டது