சதீஷ் சிவலிங்கம்

சதீஷ் சிவலிங்கம் (Sathish Sivalingam, பிறப்பு: சூன் 23, 1992) 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள், 2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் ஆகியவற்றில் பாரம் தூக்குதல் – ஆடவர் 77 கிலோ போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குனர் ஆவார்.[2]

சதீஷ் சிவலிங்கம்
பளு தூக்குதலுக்காக சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு 2015 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு23 சூன் 1992 (1992-06-23) (அகவை 32)
வேலூர், தமிழ்நாடு, இந்தியா
உயரம்1.75 m (5 அடி 9 அங்) (2014)
எடை76 kg (168 lb) (2014)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுபளு தூக்குதல்
நிகழ்வு(கள்)77 கிலோ
பயிற்றுவித்ததுதிரு.நாகராஜன்[1]
7 ஏப்ரல் 2018 இற்றைப்படுத்தியது.

இயற்வாழ்க்கை

தொகு

வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரியில் உள்ள அட்லஸ் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற சதீஷ் சிவலிங்கம், 2007ல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்ந்து நாகராஜ் என்பவரிடம் பயிற்சி பெற்றார்.

விளையாட்டு வாழ்வு

தொகு
  • பள்ளி, மாவட்ட, மாநில, தேசிய அளவில் சப்-ஜூனியர், ஜூனியர் என பல தங்க பதக்கங்களைக் குவித்த இவர், சீனியர் பிரிவுக்கு முன்னேறினார்.
  • 2011இல் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய சீனியர் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
  • 2011இல் தென்னக ரயில்வேயின் எழுத்தர் பணியில் சேர்ந்த இவர், 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டுகள் தங்கப் பதக்கம் வென்றார்.[3]
  • இசுக்கொட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில், சிவலிங்கம் 77 கிலோ வகைப்பாட்டில் தங்கப்பதக்கம் வென்றார்; இசுநாட்சில் 149 கிலோவும் கிளீன் & ஜெர்க்கில் 179 கிலோவுமாக மொத்தம் 328 கிலோ எடையைத் தூக்கி உள்ளார். இசுநாட்சில் 149 கிலோ தூக்கியது புதிய போட்டிச் சாதனையாகும்.[4][5]
  • ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டு நகரில் நடந்த 21வது பொதுநலவாய விளையாட்டுக்களில், சிவலிங்கம் 77 கிலோ வகைப்பாட்டில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றார்; இசுநாட்சில் 144 கிலோவும் கிளீன் & ஜெர்க்கில் 173 கிலோவுமாக மொத்தம் 317 கிலோ எடையைத் தூக்கினார்.[6]

பெற்ற விருதுகள்

தொகு

மேற் சான்றுகள்

தொகு
  1. "நாகராஜன் - பயிற்சியாளர்". பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2014.
  2. "Glasgow 2014 - Men's 77kg Group A". Glasgow 2014. Archived from the original on 9 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "தென்னக ரயில்வேயில் எழுத்தர் பணி". பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2014.
  4. "Glasgow 2014: Jack Oliver and Sarah Davies miss out on medals". BBC. 27 July 2014. http://www.bbc.com/sport/0/commonwealth-games/28513744. பார்த்த நாள்: 28 July 2014. 
  5. "காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர் சதீஸ் தங்கப்பதக்கம் வென்றார்!". விகடன் செய்திகள். 28 சூலை 2014. Archived from the original on 2014-07-29. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2014.
  6. "கோல்டுகோஸ்டு 2018: சதிஸ் தங்கப்பதக்கம் வென்றார்". திஹிந்து தமிழ். 7 ஏப்ரல் 2018. http://tamil.thehindu.com/sports/article23463465.ece. பார்த்த நாள்: 7 ஏப்ரல் 2018. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதீஷ்_சிவலிங்கம்&oldid=3727122" இலிருந்து மீள்விக்கப்பட்டது