சதுர இருஅடிக்கண்டம்
சதுர இருஅடிக்கண்டம் | |
---|---|
வகை | இருஅடிக்கண்டம் |
முகங்கள் | 8 சரிவகங்கள், 2 சதுரங்கள் |
Edges | 20 |
Vertices | 12 |
சமச்சீர்மை குலம் | D4h |
இருமப் பன்முகி | நீள் சதுர இருபட்டைக்கூம்பு |
பண்புகள் | குவிவு |
சதுர இருஅடிக்கண்டம் (square bifrustum) அல்லது முனைதுண்டிக்கப்பட்ட சதுர இருபட்டைக்கூம்பு (square truncated bipyramid) என்பது, இருஅடிக்கண்டப் பன்முகிகளின் முடிவிலாத் தொடரில் இரண்டாவதாக உள்ள இருஅடிக்கண்ட வகையாகும். ஒரு சதுர இருஅடிக்கண்டம், 4 சரிவக முகங்களையும் 2 சதுர முகங்களையும் கொண்டிருக்கும். ஒரு சதுர இருபட்டைக்கூம்பின் (எண்முகி) துருவ அச்சின் இரு முனைகளையும் துண்டித்து, அதன் இரு அடிக்கு-அடி அடிக்கண்டங்களின் இணைப்பு மூலம் ஒரு சதுர இருஅடிக்கண்டத்தை வடிவமைக்கலாம்.
சதுர இருஅடிக்கண்டம், நீள் சதுர இருபட்டைக்கூம்பின் இருமப் பன்முகியாகும்.