சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது - இந்திய சர்வதேச திரைப்பட விழா

இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகள்

சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது - இந்திய சர்வதேச திரைப்பட விழா (முன்னர் இந்திய சர்வதேச திரைப்பட விழா வாழ்நாள் சாதனையாளர் விருது ) என்பது இந்திய சர்வதேச திரைப்பட விழாவால் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச கௌரவமாகும். உலக சினிமாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தங்கள் திரைப்பட கலையின் மூலம் அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக இவ்விருது அளிக்கப்படுகிறது.[1] .

சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது - இந்திய சர்வதேச திரைப்பட விழா
உலகத் திரைப்படத்துறையில் பங்களிப்பிற்க்கான சர்வதேச விருது
விருது வழங்குவதற்கான காரணம்"உலகத் திரைப்படத்துறையின் வளர்ச்சி மற்றும் பங்களிப்பவர்களுக்கு கொடுக்கப்படும் கெளரவம்"
இதை வழங்குவோர்இந்திய சர்வதேச திரைப்பட விழா
முன்பு அழைக்கப்பட்டது பெயர்வாழ்நாள் சாதனையாளர் விருது - இந்திய சர்வதேச திரைப்பட விழா
முதலில் வழங்கப்பட்டது1999; 25 ஆண்டுகளுக்கு முன்னர் (1999)
கடைசியாக வழங்கப்பட்டது2022
சமீபத்தில் விருது பெற்றவர்கார்லோஸ் சௌரா
Highlights
முதல் விருது பெற்றவர்பெர்னார்டோ பெர்டோலூசி

பின்னணி

தொகு

இந்த விருது முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு முப்பதாவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இருந்து வாழ்நாள் சாதனையாளர் விருது தொடங்கப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது. [2] 2021 ஆம் ஆண்டு 52 வது பதிப்பின் போது, சத்யஜித் ரேயின் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, திரைப்பட விழாக்களின் இயக்குனரகம், அவரின் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் வகையில், "இந்திய சர்வதேச திரைப்பட விழா- வாழ்நாள் சாதனையாளர் விருது" "இந்திய சர்வதேச திரைப்பட விழா- சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது" என மறுபெயரிடப்பட்டது. ". [3]

  விருது பெற்றவர்கள்

தொகு

சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது (2021 முதல் – தற்போது)

தொகு
ஆண்டு விருது பெற்றவர் நாடு கலை
2021
(ஐம்பத்திரண்டாவது )
மார்ட்டின் ஸ்கோர்செஸி அமெரிக்கன் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர்
இஸ்த்வான் சாபோ ஹங்கேரிய திரைப்பட இயக்குனர்
2022
(ஐம்பத்துமூன்றாவது )
கார்லோஸ் சௌரா ஸ்பானிஷ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், புகைப்படக்காரர் மற்றும் நடிகர்

இந்திய சர்வதேச திரைப்பட விழா வாழ்நாள் சாதனையாளர் விருது (1999–2020)

தொகு
ஆண்டு விருது பெற்றவர் நாடு கலை
1999
(முப்பதாவது)
பெர்னார்டோ பெர்டோலூசி இத்தாலிய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர்
2003
(முப்பத்தி நான்காவது)
லிவ் உல்மன் நார்வேஜியன் திரைப்பட இயக்குனர், நடிகை
2007
(முப்பத்தி எட்டாவது)
திலீப் குமார் இந்தியன் நடிகர்
2007
(முப்பத்தி எட்டாவது)
லதா மங்கேஷ்கர் இந்தியன் பாடகர்
2011
(நாற்பத்திரெண்டாவது )
பெர்ட்ராண்ட் டேவர்னியர் பிரெஞ்சு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர்
2012
(நாற்பத்திமுன்றாவது )
கிறிஸ்டோப் ஜானுஸ்ஸி போலிஷ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்
2013
(நாற்பத்திநான்காவது )
ஜிரி மென்செல் செக் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர்
2014
(நாற்பத்ததைந்தாவது )
வோங் கர்-வாய் ஹாங்காங் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர்
2015
(நாற்பத்தாறாவது )
நிகிதா மிகல்கோவ் ரஷ்யன் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர்
2016
(நாற்பத்தேழாவது )
இம் குவான்-டேக் தென் கொரியர்கள் திரைப்பட இயக்குனர்
2017
(நாற்பத்தியெட்டாவது )
ஆட்டம் ஈகோயன் கனடியன் திரைப்பட இயக்குனர்
2018
(நாற்பத்தியொன்பதாவது )
டான் வோல்மேன் இஸ்ரேலிய / பாலஸ்தீனிய திரைப்பட இயக்குனர்
2019
(ஐம்பதாவது)
இசபெல் ஹப்பர்ட் பிரெஞ்சு நடிகை
2020
(ஐம்பத்தியொன்றாவது )
விட்டோரியோ ஸ்டோராரோ இத்தாலிய ஒளிப்பதிவாளர்

மேற்கோள்கள்

தொகு