சத்யதேவ் பிரசாத்

சத்யதேவ் பிரசாத் (Satyadev Prasad)(பிறப்பு 19 செப்டம்பர் 1979) இந்தியாவைச் சேர்ந்த தடகள வீரர் ஆவார். இவர் வில்வித்தை போட்டியில் கலந்துகொள்கிறார்.[1]

சத்யதேவ் பிரசாத் 2018ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் இருந்து தியான் சந்த் விருதைப் பெறுகிறார்.

பிரசாத் 2004 கோடைக்கால ஒலிம்பிக்கில் ஆண்கள் தனிநபர் வில்வித்தையில் போட்டியிட்டார்.[2] இவர் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று 32வது சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்று வெளியேறுப் போட்டியில் வெற்றி பெற்று 16வது சுற்றுக்கு முன்னேறினார். மூன்றாவது ஆட்டத்தில் பிரசாத் வீழ்ச்சியடைந்தார். ஏனெனில் இவர் கடைசி சுற்று வரை சென்ற பரபரப்பான ஆட்டத்தில் தரவரிசையில் முதலாவது இடத்தில் உள்ள தென் கொரியா வீரர் இம் டோங்-ஹியூனிடம் தோற்றார். பிரசாத் ஒட்டுமொத்தமாக 10வது இடம் பிடித்தார். பிரசாத் வில்வித்தையில் 2018-தயான்சந்த் விருதைப் பெற்றார். மேலும் இவர் 25 செப்டம்பர் 2018 அன்று விருதைப் பெறுவார்.

பிரசாத் 2004 கோடைக்கால ஒலிம்பிக்கில் 11வது இடம் பெற்ற இந்திய ஆண்கள் வில்வித்தை அணியிலும் உறுப்பினராக இருந்தார். மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அணி வாகையாளர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். உரோம் உலக வாகையாளர் போட்டி 1999, பெய்ஜிங் உலக வாகையாளர் போட்டி 2001 மற்றும் நியூயார்க் உலக வாகையாளர் போட்டி 2003 ஆகியவற்றில் பங்கேற்றார். தாத்ரியில் உள்ள நொய்டா உடற்கல்வி கல்லூரியில் தனது பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்பினை விளையாட்டுக் கல்வியில் முடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சத்யதேவ் பிரசாத் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆசம்கர் மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் நகரில் பிறந்தார்.[3] இவர் சிறு வயதிலேயே வில்வித்தை விளையாட்டை விளையாடத் தொடங்கினார். புகழ்பெற்ற வில்லாளியான லிம்பா ராமின் வெற்றியால் ஈர்க்கப்பட்ட இவர், விளையாட்டில் உயரக் கடுமையாகப் பாடுபட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. . 9 August 2004. 
  2. "Satyadev Prasad". sports-reference.com. Archived from the original on 18 April 2020. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
  3. "Olympian archer Satyadev Prasad will receive dhyan chand award". live hindustan. 20 September 2018. https://www.livehindustan.com/uttar-pradesh/azamgarh/story-olympian-archer-satyadev-prasad-will-receive-dhyan-chand-award-2182870.html. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யதேவ்_பிரசாத்&oldid=3789287" இலிருந்து மீள்விக்கப்பட்டது