சத்யபிரிய தீர்த்தர்

சத்யப்பிரியத் தீர்த்தர் (Satyapriya Tirth) (1701 - 1744) இந்தியாவைச் சேர்ந்த இவர் ஓர் இந்து மதத் தத்துவவாதியும், குருவும், ஆய்வாளரும், யோகியும், ஆன்மீகவாதியுமாவார். மேலும் உத்திராதி மடத்தின் 24வது தலைவராக 1737-1744 வரை இருந்தவரும், துவைதத் தத்துவத்தைப் பரப்பிய சத்யவிஜய தீர்த்தரின் சீடராவார். [2]

சத்யபிரிய தீர்த்தர்
பிறப்பு1701[1]
ராய்ச்சூர், கருநாடகம்
இறப்பு1744
மானாமதுரை, தமிழ்நாடு
இயற்பெயர்கார்லபாத் ராமச்சார்யா
சமயம்இந்து சமயம்
தத்துவம்துவைதம்,
வைணவ சமயம்
குருசத்யபூர்ண தீர்த்தர்

சுயசரிதை

தொகு

இவரது வாழ்க்கையைப் பற்றிய பெரும்பாலான தகவல்கள் பிஜாப்பூரின் பீமதைவஜ்னர் என்பவர் எழுதிய குருவம்சகதகல்பத்ரு என்ற குருபரம்பரை நூலிலிருந்து பெறப்பட்டுள்ளது. இவர் ஓர் சேச அம்சத்துடன் 1701 இல் ராய்ச்சூரில் கார்லபாத் ராமாச்சார்யாவாக பிறந்தார். இவருக்கு ஆரம்பத்தில் சத்யபூர்ண தீர்த்தரால் சன்னியாசம் வழங்கப்பட்டது. அவர் நோய்வாய்ப்பட்டபோது, இவர் துவைதத் தத்துவத்தை பரப்புவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இவர் சத்ய விஜய தீர்த்தராகப் பெயரிடப்பட்டார். . [3] இவர் 1744-ல் இறந்தார் . மேலும், இவரது உடலானது மானாமதுரையிலுள்ள ஒரு மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது . [2] இவருக்குப் பின் சத்யபோத தீர்த்தர் மடத்திற்குப் பொறுப்பேற்றார்.

படைப்புகள்

தொகு

இவர் ஆறு முக்கிய படைப்புகளை இயற்றியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை மத்துவர், ஜெயதீர்த்தர், வியாசதீர்த்தர் ஆகியோரின் படைப்புகளாகும். மேலும், ஒரு புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பையும் இயற்றியுள்ளார். [4] [2] [5] [6] [7] [8]

மேற்கோள்கள்

தொகு
  1. Ritti 1961, ப. 3.
  2. 2.0 2.1 2.2 Sharma 2000, ப. 508.
  3. Rao 1984, ப. 67.
  4. Majumdar & Pusalker 1977, ப. 710.
  5. Bhattacharyya 1970, ப. 359.
  6. Potter 1995, ப. 1473.
  7. Pandurangi 2000, ப. Ixiv.
  8. Krishna 2002, ப. 359.

நூலியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யபிரிய_தீர்த்தர்&oldid=3046695" இலிருந்து மீள்விக்கப்பட்டது