சத்ருபஞ்சா
சத்ருபஞ்சா (Satrubhanja) பொ.ச. 4-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (பொ.ச.261 முதல் 340 வரை இருக்கலாம்) ஒடிசாவின் கியோஞ்சர் பகுதியிலிருந்து ஆட்சி செய்த பத்மாவதி நாக ஆட்சியாளர்களின் விந்தியதாபி கிளையைச் சேர்ந்த ஒரு போர்வீரனும், பேரரசரும் ஆவார். [1] சத்ருபஞ்சாவின் சகாப்தம் இந்தியாவில் ஏகாதிபத்திய சக்தியாக குப்தப் பேரரசின் எழுச்சிக்கு முந்தையது. இந்தியாவின் மற்ற ஆளும் பரசிவ நாகர்களுடன் சேர்ந்து பாடலிபுத்திரத்தை ஆண்டு வந்த குசானர்களை தூக்கியெறிய கைகோர்த்தார். அசன்பத் கிராமத்தில் கிடைத்துள்ள நடராசரின் கல்வெட்டு சமசுகிருத மொழியில், பிந்தைய பிராமி அல்லது சத்ருபஞ்சாவின் ஆரம்பகால கலிங்க எழுத்துகளுடன், வெற்றியாளர் எனவும் ஆன்மீக மனிதராக இவர் செய்த சாதனைகள் பற்றியும் விரிவான விவரங்களை வழங்குகிறது. பதின்மூன்று வரிகளைக் கொண்ட கல்வெட்டு பகுதி வசனமாகவும், பகுதி உரைநடையாகவும் எழுதப்பட்டுள்ளது.
சத்ருபஞ்சா | |
---|---|
இரணஸ்லாகின் | |
ஆட்சிக்காலம் | பொ.ச. 261க்கும் 340க்கும் இடையே இருக்கலாம் |
பின்னையவர் | திசபஞ்சா |
மரபு | பத்மாவதி நாகர்களின் விந்தியாதாபி கிளை |
தந்தை | மனபஞ்சாதமயந்தி |
ஒடிசாவில் நாகர்களின் ஆட்சி
தொகுபண்டைய மத்திய இந்தியாவில், விதிசா, பத்மாவதி, கந்திப்பூர், மதுரா போன்ற நகரங்களை தலைநகரங்களாகக் கொண்டு பொ.ச. 2 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ச. 4 ஆம் நூற்றாண்டு வரை நாக குலத்தினர் ஆட்சி செய்தனர். அசன்பத் கல்வெட்டு மூலம் சத்ருபஞ்சா கியோஞ்சர் என அடையாளம் காணப்பட்ட விந்தியதாபி கிளையிலிருந்து வடக்கு மற்றும் மேற்கு ஒடிசாவை ஆண்ட இந்த குலத்தின் பகுதியைச் சேர்ந்தவர் என்று அறிகிறோம். ஒடிசாவின் இந்தப் பகுதியில் நாகர்கள் ஒரு பரவலான சக்தியாக இருந்தனர். அதே நேரத்தில் முருண்டாக்கள் முழு திரி- கலிங்கப் பகுதியின் ஆதிக்க சக்தியாக ஆட்சி செய்தனர். குசான சக்தியும் வீழ்த்தப்பட்ட அதே சகாப்தத்தில் முருண்டாக்கள் நாகர்களால் தூக்கியெறியப்பட்டனர். ஒடிசாவின் வரலாற்றில் நாக குலத்தின் தோற்றம் பற்றிய பல பிற்கால குறிப்புகள் உள்ளன. குறிப்பாக ஒடிசாவின் பிற்கால பௌமகரா ராணி, முதலாம் திரிபுவன மகாதேவி நாக ஆட்சியாளரின் மகள் என்றும் நம்பப்படுகிறது. [2]
அசன்பத் கல்வெட்டு
தொகுஇப்போது ஒடிசா மாநில அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அசன்பத் கல்வெட்டு, சத்ருபஞ்சாவை ஆட்சியாளர் எனவும் போர்வீரன் எனவும் விரிவான கண்ணோட்டத்தை அளிக்கிறது. இவர் நாக குலத்தில் அரசர்களிடையே சந்திரனைப் போலப் பிறந்தவர் என்றும், மகாபாரதத்தில் பீஷ்மருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயரான இரனஸ்லாகின் (போரில் பெருமை கொண்டவர்) என்றும் விவரிக்கப்படுகிறார். [3] கலியுகத்தின் இறுதி வரை நீடிக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த தெய்வீக குழந்தை என்றும் விவரிக்கப்படுகிறார். அநேகமாக இவர் மிக உயர்ந்த நாக குலக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கல்வெட்டின் படி எதிர்காலத்தில் எதிரிகளுடன் போரில் வெற்றி பெறுவார் என்றும் கருதப்படுகிறது. சத்ருபஞ்சா விந்தியதாபியின் (கியோஞ்சர் மற்றும் அதை ஒட்டிய நவீன மயூர்பஞ்ச் - சிங்பூம் மாவட்டங்கள்) ஆட்சியாளராக விவரிக்கப்படுகிறார். இவர் மகாராஜா மானபஞ்சா மற்றும் ராணி மகாதேவி தமயந்தி ஆகியோரின் மகன். முருண்டாக்கள் மற்றும் குசானர்களுடன் நூற்றுக்கணக்கான போர்களுக்குப் பிறகும் இவர் ஒரு வெற்றிகரமான போர்வீரராக இருந்தார். பூமியில் நிறை பிரகாசம் கொண்ட சூரியனைப் போலவே பூமியில் நல்ல செல்வத்தின் தரத்தை கல்வெட்டில் விவரிக்கப்படுகிறார்.
சான்றுகள்
தொகு- ↑ "ORIGIN, GENEALOGY AND CHRONOLOGY OF THE BHANJAS" (PDF). www.shodhganga.inflibnet.ac.in. pp. 74, 75. பார்க்கப்பட்ட நாள் 7 May 2018.
- ↑ "Nagas in the Sculptural Decorations of Early West Orissan Temples, Part Three". www.harekrsna.com. பார்க்கப்பட்ட நாள் 7 May 2018.
- ↑ McGrath, Kevin (1 January 2004). The Sanskrit Hero: Karṇa in Epic Mahābhārata (in ஆங்கிலம்). BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-13729-5.