சந்தனராசா
சந்தனராசா (Chandanaraja) (ஆட்சி 890-917பொ.ச.) சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னர். இவர் வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை ஆட்சி செய்தார்.
சந்தனராசா | |
---|---|
சகமான மன்னன் | |
ஆட்சிக்காலம் | சுமார் 890–917 பொ.ச. |
முன்னையவர் | இரண்டாம் கோவிந்தராசன் |
பின்னையவர் | முதலாம் வாக்பதிராஜா |
அரசமரபு | சாகம்பரியின் சௌகான்கள் |
தந்தை | இரண்டாம் கோவிந்தராசன் |
இவர் தனது தந்தை இரண்டாம் கோவிந்தராசனுக்குப் (இரண்டாம் குவாகா) பிறகு சகமான மன்னராக ஆனார். இவர் வாப்பயராஜா என்றும் மாணிக்க ராய் என்றும் அழைக்கப்படுகிறார்.[1]
ஹர்ஷநாத் கோயில் கல்வெட்டின் படி, சந்தன ருத்ரா (அல்லது உருத்ரேனா) என்ற தோமரா ஆட்சியாளரை தோற்கடித்ததாக அறியப்படுகிறது. வரலாற்றாசிரியர் தசரத சர்மா இந்த ஆட்சியாளரை தில்லியின் தோமரா வம்சத்தின் ஒரு மன்னருடன் அடையாளப்படுத்துகிறார்.[2] உருத்ரன் என்பது தோமரா ஆட்சியாளர் சந்திரபாலன் அல்லது பிபாசபாலனின் மற்றொரு பெயர் என்று வரலாற்றாசிரியர் ஆர்.பி. சிங் கருதுகிறார். [3]
இவரது ராணி ருத்ராணி அவளுடைய யோக சக்தியின் காரணமாக "ஆத்ம-பிரபா" என்றும் அழைக்கப்பட்டாள் என்று பிருத்விராஜ விஜயம் கூறுகிறது. அவள் புஷ்கர் ஏரிக்கரையில் 1,000 விளக்கு போன்ற இலிங்கங்களை அமைத்ததாக கூறப்படுகிறது. [3]
சான்றுகள்
தொகு- ↑ R. B. Singh 1964, ப. 56.
- ↑ Dasharatha Sharma 1959, ப. 26–27.
- ↑ 3.0 3.1 R. B. Singh 1964.
உசாத்துணை
தொகு- Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
- R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.