சந்தர் மோகன்

இந்திய அரசியல்வாதி

சந்தர் மோகன் பிஷ்னோய் (Chander Mohan) ஓர் இந்திய அரசியல்வாதியும், அரியானா முன்னாள் துணை முதல்வரும் ஆவார். இவர் அரியானாவின் முன்னாள் முதலமைச்சர் பஜன்லால் பிஷ்னோயியின் மூத்த மகன் ஆவார். இவர் தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். முன்பு இவர் அரியானா ஜன்கித் காங்கிரசு உறுப்பினராக இருந்தார். கல்கா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக 4 முறை அரியானா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2024 அக்டோபர் மாதம் நடைபெற்ற அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு 5ஆவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[1]

சந்தர் மோகன்
சட்டமன்ற உறுப்பினர்-அரியானா சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
அக்டோபர் 2024
முன்னையவர்உகம் சிங் (அரியானா)
பின்னவர்துஷ்யந்த் சவுதாலா
பதவியில்
1993–1996
முன்னையவர்புரூசு பான்
பின்னவர்பிரதீப் சவுத்ரி
தொகுதிகால்கா
பதவியில்
1996–2000
பதவியில்
2000–2005
பதவியில்
மார்ச் 2005-2008
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 செப்டம்பர் 1965 (1965-09-13) (அகவை 59)
ஹிசார், கிழக்கு பஞ்சாப், இந்தியா
(தற்பொழுது அரியானா, இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சீமா பைசா (முத்தலாக்கில் விவகாரத்து)
பிள்ளைகள்சித்தார்த் பிஷ்னோய்
தாமினி பிஷ்னோய்
பெற்றோர்பஜன்லால் (தந்தை)
ஜாசுமா தேவி (தாய்)
வாழிடம்பஞ்ச்குலா

இளமையும் கல்வியும்

தொகு

பிஷ்னோய் அரியானா அரசியல் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பஜன் லால் அரியானாவின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார். அதே நேரத்தில் இவரது இளைய சகோதரர் குல்தீப் பிஷ்னோயும் ஒரு அரசியல்வாதி ஆவார்.[2] பிஷ்னோய் சனாவரின் லாரன்சு பள்ளியில் கல்வி பயின்றார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Panchkula poll results: Congress candidate Chander Mohan Bishnoi defeats BJP's Gian Chand Gupta in nailbiter". The Indian Express (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  2. "Former Haryana chief minister Bhajan Lal dies of heart attack". NDTV. Press Trust of India. 3 June 2011 இம் மூலத்தில் இருந்து 18 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160418101911/http://www.ndtv.com/india-news/former-haryana-chief-minister-bhajan-lal-dies-of-heart-attack-457534. 
  3. "Sanawar-alumni Lawrence School". TOI. 25 March 2012. http://timesofindia.indiatimes.com/topiclist/Lawrence-School. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தர்_மோகன்&oldid=4110300" இலிருந்து மீள்விக்கப்பட்டது