சந்தான குரவர்கள்
சந்தான குரவர்கள் சைவ சமயத்தின் அன்பு, பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்கள் போன்று அறிவு நெறியை வளர்த்தவர்கள் ஆவர். இவர்களை சைவ சமய சந்தானாசாரியார்கள் என்றும் அழைப்பதுண்டு. [1] சந்தான குரவர்களை அகச்சந்தான குரவர்கள், புறச்சந்தான குரவர்கள் என இருவகையினர்.
அகச்சந்தான குரவர்
தொகுதிருக்கைலாய பரம்பரையிலிருந்து தொடங்கும் திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அகச்சந்தான குரவர்கள். [2] [3] திருகைலாய பரம்பரை என்பது நந்திதேவரே குருவாக கொண்டு ஆரம்பித்தது. நேரடியாக கைலாயத்துடன் தொடர்பு கொண்டமையால் இவர்களை அகச்சந்தான குரவர் என்று அழைக்கின்றனர்.
புறச்சந்தான குரவர்
தொகுஅகச்சந்தான குரவர்களில் நான்காமவராகிய பரஞ்சோதியாரின் சீடராகிய மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகிய நால்வரும் புறச்சந்தான குரவர்கள் ஆவர். [3] திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் முதலிய சைவ ஆதீனங்கள் உமாபதிசிவாச்சாரியாரின் சீடப்பரம்பரையால் தோற்றிவைக்கப்பட்டவையாகும்.
ஆதாரங்கள்
தொகு- ↑ சைவ சமய சிந்தாமணி - சைவப் புலவர் கா அருணாசல தேசிகமணி
- ↑ http://thiruvavaduthuraiadheenam.com/index.php/home/ பரணிடப்பட்டது 2017-07-09 at the வந்தவழி இயந்திரம் திருவாடுதுறை ஆதினம் வரலாறு
- ↑ 3.0 3.1 https://thirumarai.com/santana-kuruvar/ பரணிடப்பட்டது 2015-08-21 at the வந்தவழி இயந்திரம் சந்தான குரவர்கள்