சந்திரிகா (மலையாள இதழ்)

சந்திரிகா என்பது கேரளத்தின் கோழிக்கோடில் உள்ள முஸ்‌லிம் பிரிண்டிங், பப்ளிசிங் கம்பனி வெளியிடும் மலையாள நாளிதழ். இது முஸ்லிம் லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு. கேரளத்தில் கோழிக்கோடு, கண்ணூர், மலப்புறம், கொச்சி, திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய நகரங்களில் வெவ்வேறு பதிப்புகள் அச்சடிக்கப்படுகின்றன. அரபு நாடுகளில், துபை, பஹ்‌ரைன், கத்தார் ஆகிய பகுதிகளில் மிடில் ஈஸ்டு சந்திரிகா என்ற பெயரில் வெவ்வேறு பதிப்புகள் வெளியாகின்றன. டி. பி செரூப்பயான் இந்த இதழின் ஆசிரியர்.

சந்திரிகா
வகைநாளேடு
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)கேரள முஸ்லீம் பிரிண்டிங் அண்டு பப்ளிசிங் கோ லிமிடெட்
நிறுவியது1934
தலைமையகம்கோழிக்கோடு
இணையத்தளம்[1]

பிற வெளியீடுகள்

தொகு
  • மகிள சந்திரிகா
  • சங்ஙாதி
  • ஆரோக்ய சந்திரிகா

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரிகா_(மலையாள_இதழ்)&oldid=1606920" இலிருந்து மீள்விக்கப்பட்டது