சந்திர பிரபா வனவிலங்கு காப்பகம்

சந்திரபிரபா வனவிலங்கு காப்பகம் (Chandra Prabha Wildlife Sanctuary) என்பது சந்திரபிரபா என்றும் அழைக்கப்படுகிறது. இது மத்திய இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சந்தௌலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அழகான சுற்றுலாத் தலங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் ராஜ்தாரி, தேவ்தாரி மற்றும் நௌகர் அருவி போன்ற அருவிகள் இங்கு காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகளைச் சுற்றுப்புறத்திற்கு ஈர்க்கிறது. சந்திர பிரபா வனவிலங்கு சரணாலயம் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான வாரணாசியிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சந்திர பிரபா வனவிலங்கு காப்பகம்
சந்திர பிரபா வனவிலங்கு காப்பகத்தில் அருவி ஒன்று
Map showing the location of சந்திர பிரபா வனவிலங்கு காப்பகம்
Map showing the location of சந்திர பிரபா வனவிலங்கு காப்பகம்
அமைவிடம்சந்தௌலி மாவட்டம், உத்தரப் பிரதேசம்,  இந்தியா
அருகாமை நகரம்வாரணாசி, உத்தரப் பிரதேசம்,  இந்தியா
ஆள்கூறுகள்25°42′N 83°16′E / 25.7°N 83.27°E / 25.7; 83.27

வரலாறு

தொகு

18ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இப்பகுதி காசி நாட்டு ஆட்சியாளர்களுக்கான வேட்டையாடும் காடு பாதுகாப்பகமாக மாற்றப்பட்டது.[1] வனவிலங்கு சரணாலயம் மே 1957-இல் நிறுவப்பட்டது. ஆசியச் சிங்கங்கள் 1958ஆம் ஆண்டில் சந்திர பிரபாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. 1969ஆம் ஆண்டுக்குள் சிங்கங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து பதினொரு ஆக அதிகரித்து. ஆரம்பத்தில் இந்தப் பணி வெற்றிகரமாக நடைபெற்றது. இருப்பினும், அடுத்தடுத்த ஆண்டுகளில் சிங்கங்கள் காணாமல் போயின. இது தொடர்பாக இந்திய அரசு இன்னும் எந்த முடிவு எடுக்கவில்லை என்றாலும், 1993ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

அமைவிடம்

தொகு

சந்திர பிரபா காப்பகம் 78 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கைமூர் மலைத்தொடரின் வடக்கு சரிவில் உள்ள நௌகர் மற்றும் விஜயகர் குன்றுகளில் அமைந்துள்ளது. கங்கையின் துணை ஆறான கரம்னாசா ஆறும், கரம்னாசாவின் துணை ஆறான சந்திரபிரபா ஆறும் இந்தச் சரணாலயத்தின் வழியாகப் பாய்கிறது.[2]

தாவரங்களும் விலங்குகளும்

தொகு

இந்தச் சரணாலயம் 78 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[3] இந்தச் சரணாலயம் கீழ் கங்கை சமவெளியின் ஈரமான இலையுதிர் காடுகளின் சுற்றுச்சூழல் பகுதிக்குள் அமைந்துள்ளது.[4]

தாவரச் சமூகங்களில் வண்டல் சவன்னா காடுகள், தெற்கு உலர்ந்த கலப்பு இலையுதிர் காடுகள், உலர்ந்த இலையுதிர்காலப் புதர் மற்றும் சவன்னா, வறண்ட வெப்பமண்டல ஆற்றுக் காடுகள் மற்றும் பாலைவன முள் காடுகள் மற்றும் புதர் காடுகள் அடங்கும்.[5]

விலங்கினங்களில் சிறுத்தை, காட்டுப்பன்றி, நீலான், கடமான், இந்திய சிறுமான் மற்றும் புள்ளி மான் மற்றும் பல வகையான பறவைகள் அடங்கும்.[6][7]

சுற்றுலா இடங்கள்

தொகு

சந்திரபிரபாவில் பல்வேறு வகையான காட்டு விலங்குகள் காணப்படுகின்றன. இவற்றில் புல்வாய், புள்ளி மான், கடமான், நீலான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி மற்றும் இந்தியச் சிறுமான் ஆகியவை அடங்கும். ஊர்வன இனங்களில் மலைப்பாம்பு அடங்கும்.

சுமார் 150 வகையான பறவைகளைக் காணும் வகையில் இந்தப் பூங்கா பறவைகளைக் கவனிப்பவர்களின் சொர்க்கமாகும். இயற்கை தாவரங்களில் மகுவா, சாகுன், அமால்டாக்கள், டெண்டு, கோரையா, பெர் போன்றவை அடங்கும்.

அணுகல்

தொகு

வாரணாசி நகர மையத்திலிருந்து 65 கி. மீ. தொலைவில் சந்திர பிரபா சரணாலயம் அமைந்துள்ளது. பூங்காவை அடைய மிகவும் வசதியான வழி ஒரு மகிழ்வுந்தினை வாடகைக்கு எடுத்து வருவதாகும். இந்தப் பயணம் சுமார் இரண்டு மணி நேரம் எடுக்கும். அருகிலுள்ள தொடருந்து சந்திப்பு ஃஇலீம் பண்டிட் தீன தயாள உபாத்தியா தொடருந்து நிலையமும் வாரணாசி தொடருந்து நிலையமும் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Imperial Gazetteer of India. v. 17, p. 368.
  2. Ilyas, Orus & A Khan, Jamal. (2005). "Habitat Association and Conservation of Ungulates in Chandraprabha Wildlife Sanctuary, Uttar Pradesh, India. Tropical Biodiversity 8(3). 173-185.
  3. Sharad Singh Negi. Handbook of National Parks, Wildlife Sanctuaries, and Biosphere Reserves in India. Indus Publishing, 2002. P. 160.
  4. World Wildlife Fund. "Lower Gangetic plains Moist Deciduous Forests". Accessed 22 November 2017.
  5. Sharad Singh Negi. Handbook of National Parks, Wildlife Sanctuaries, and Biosphere Reserves in India. Indus Publishing, 2002. P. 160.
  6. Sharad Singh Negi. Handbook of National Parks, Wildlife Sanctuaries, and Biosphere Reserves in India. Indus Publishing, 2002. P. 160.
  7. Ilyas, Orus & A Khan, Jamal. (2005). "Habitat Association and Conservation of Ungulates in Chandraprabha Wildlife Sanctuary, Uttar Pradesh, India." Tropical Biodiversity. 8(3). 173-185.