சந்தூர் சமஸ்தானம்

சந்தூர் சமஸ்தானம் (Sandur State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால கர்நாடகா மாநிலத்தின் பெல்லாரி மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் சந்தூர் நகரம் ஆகும். [2]1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சந்தூர் சமஸ்தானம் 433 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 11,200 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.

Warning: Value not specified for "common_name"
சந்தூர் சமஸ்தானம்
சுதேச சமஸ்தானம்
[[மராத்தியப் பேரரசு|]]
1713–1949 [[இந்தியா|]]

Flag of

கொடி

Location of
Location of
சென்னை மாகாண வரைபடத்தில் சந்தூர் சமஸ்தானம், ஆண்டு 1913
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1713
 •  இந்திய விடுதலை 1949
பரப்பு
 •  1901 433 km2 (167 sq mi)
Population
 •  1901 11,200[1] 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் பெல்லாரி மாவட்டம், கர்நாடகா, இந்தியா

வரலாறு தொகு

சந்தூர் சமஸ்தானம் கிபி 1731-ஆம் ஆண்டு முதல் மராத்திய பிராமணர்கள் ஆட்சி செய்தனர்.[3] 1776 – 1790-ஆம் ஆண்டுகளில் சந்தூர் சமஸ்தானப் பகுதிகள் மைசூர் இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1817-ஆம் ஆண்டில் மராத்தியப் பேரரசின் கீழ் சந்தூர் சமஸ்தானத்தை இணைக்கப்பட்டது.

மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சந்தூர் சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். சந்தூர் சமஸ்தானம் சென்னை மாகாணத்தின் ஆளுநரின் கீழ் செயல்பட்டது.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1 ஏப்ரல் 1949 அன்று சென்னை மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சந்தூர் சமஸ்தானம் கர்நாடகா மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. S. S. Shashi (1996). Encyclopaedia Indica: Princely States in colonial India. Anmol Publications. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170418597. In 1801, Bellary district was transferred to British India, and the rajas of Sandur came under the political authority of the Madras Presidency. The area of the state was 433 sq.km. (161 sq.mi.) ; its population in 1901 was 11,200.
  2. Imperial Gazetteer of India, v. 22, p. 42.
  3. Madras State Administration Report. 1902. p. 113. Raja Srimant Venkatrao Rao Sahib, Hindu Rao Ghorpade Mamlukat- General and madar, Senapati, Raja of Sandur, is a Mahratta Brahmin by caste and a Hindu by Political. religion. He was born in 1892 and attends a public school at Bellary.

வெளி இணைப்புகள் தொகு

[[[பகுப்பு:மராத்தியப் பேரரசு]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தூர்_சமஸ்தானம்&oldid=3374290" இலிருந்து மீள்விக்கப்பட்டது