சனமாகி கோயில்

சனமாகி கோயில் (Sanamahi Temple) அல்லது சனமாகி சங்க்லன் என்பது சனமாகிசத்தின் உயர்ந்த தெய்வமான இலெய்னிங்தோ சனமாகியின் கோயிலாகும். [1] இது இந்தியாவின் மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் காங்லா அரண்மனைக்கு அருகிலுள்ள சனக்வா இயைமா கொல்லூப்பில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இருப்பினும், இது பெரும்பாலும் மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தின் நோங்மைச்சிங் மலையின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சனமாகி கியோங் கோயிலுடன் குழப்பமடைகிறது. இது மாநிலத்தின் மிகப்பெரிய கங்லே கோயில்களில் ஒன்றாகும்.

சனமாகி கோயில்
அடிப்படைத் தகவல்கள்
சமயம்சனமாகிசம்
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்மேற்கு இம்பால் மாவட்டம்

கட்டுமானம் தொகு

இது கி.பி 1891 இல் மணிப்பூர் (சுதேச அரசு) மன்னர் குலச்சந்திர சிங்கின் காலத்தில் புனரமைக்கப்பட்டது. இது ஆசியாவின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இதன் கூரை கோதிக் பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதன் தெற்கு பக்கத்தில், நீண்ட ஒரு முன்பக்கத்தைக் கொண்டுள்ளது. கட்டமைப்பு ஒரு எண்கோண அடித்தளத்தில் எழுப்பப்பட்டுளது. மேற்கு இம்பால் மாவட்டத்தில் தற்போது மணிப்பூர் இராணுவத்தின் ஒரு படைப்பிரிவு இதன் மைதானத்தில் அமைந்துள்ளது .

முக்கியத்துவம் தொகு

இது மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். மேலும் மணிப்புரி மக்கள், கபூய், பிஷ்ணுப்ரியா மணிப்புரீ மக்கள் மேலும், உலகெங்கிலும் உள்ள செலியாங்ராங் மக்கள் உட்பட சனகாமிசத்தை பின்பற்றுபவர்களின் மத இடமாகும்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனமாகி_கோயில்&oldid=3761857" இலிருந்து மீள்விக்கப்பட்டது