சனி சிங்கனாப்பூர்
சனி சிங்கனாப்பூர் அல்லது சிங்கனாப்பூர் (Shani Shingnapur) நகரமானது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், அகமதுநகர் மாவட்டத்தில், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரம். [1] [2]
சனிசிங்கனாப்பூர்
சோணை | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராஷ்டிரம் |
மாவட்டம் | அகமதுநகர் மாவட்டம் |
வருவாய் வட்டம் | நய்வாசா |
பரப்பளவு † | |
• மொத்தம் | 82.36 km2 (31.80 sq mi) |
ஏற்றம் | 499 m (1,637 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய நேர வலையம்) |
அஞ்சல் குறியீடு | 414105 |
தொலைபேசி குறியீடு | 02427 |
அகமது நகரிலிருந்து | 35 கிலோமீட்டர்கள் (22 mi) |
அவுரங்காபாத்திலிருந்து | 84 கிலோமீட்டர்கள் (52 mi) |
சீரடியிலிருந்து | 60 கிலோமீட்டர்கள் (37 mi) |
இணையதளம் | http://www.shanishinganapur.com |
சனி சிங்கனாப்பூரின் சிறப்பு, அங்குள்ள எந்த வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களின் கட்டிடங்களுக்கும் கதவுகள் இல்லை. ஆனால் நிலைக்கதவுகள் மட்டும் உண்டு. காரணம் அவ்வூரில் திருட்டுப் பயம் என்பதே இல்லை. இங்குள்ள காவல் நிலையத்தில் இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வூரில் திருடினால் சனி பகவான் தண்டித்து விடுவார் என்ற ஆழமான நம்பிக்கையே காரணம்.[3].
2011ஆம் ஆண்டில் இங்கு கிளை துவக்கிய யுனைடெட் கமர்சியல் வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்கள் தவிர மற்ற பகுதிகளில் கதவுகள் இல்லை.[4] [5]
சனி பகவான் கோயில்
தொகுசிவன் மற்றும் அனுமார் சிலைகளுக்கு முன்பு, சனி பகவான் கோயில் கட்டிடம் இன்றி திறந்த வெளியில் ஐந்தரை அடி உயர சுயம்பு வடிவில் கருங்கல்லில் அருள் புரிகிறார். கருங்கல்லில் சிவ பெருமானின் சூலாயுதமும், நந்தியும் காணப்படுகிறது. [6]. சனிபகவானை வழிபட இக்கோயிலுக்கு நாள்தோறும் 30,000 முதல் 45,000 பக்தர்கள் வருகின்றனர். அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் மூன்று இலட்சம் பக்தர்கள் இக்கோயில் கூடுகிறார்கள். சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாளில், சனி பகவானுக்கு நல்லெண்னெய், பூ மற்றும் கறுப்பு உளுந்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
சனி சிங்கனாப்பூருக்கு செல்லும் வழி
தொகுசீரடி நகரிலிருந்து 60 கி. மீ., தொலைவிலும், அகமது நகரிலிருந்து 35 கி. மீட்டர் தொலைவிலும், அவுரங்காபாத்திலிருந்து 84 கி. மீ., தொலைவிலும், பூனாவிலிருந்து 160 கி. மீ., தொலைவிலும், மும்பை நகரிலிருந்து 265 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் அவுரங்கபாத் விமான நிலையம் 90 கி. மீ., தொலைவில் உள்ளது. ஸ்ரீராம்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ளது. [7] [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-29. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
- ↑ http://timesofindia.indiatimes.com/india/God-as-guard-Bank-opens-lockless-branch/articleshow/7300436.cms
- ↑ http://timesofindia.indiatimes.com/india/God-as-guard-Bank-opens-lockless-branch/articleshow/7300436.cms
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
- ↑ http://www.shanishinganapur.com/