சன்யோகிதா ரானே
சன்யோகிதா ரானே சர்தேசாய் (Sanyogita Rane)(20 ஆகத்து 1923 - 12 சனவரி 2017) கோவாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மகாராட்டிரவாதி கோமந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வடக்கு கோவாவின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
சன்யோகிதா ரானே | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் 1980–1984 | |
முன்னையவர் | அம்ருத் சிவ்ராம் கன்சார் |
பின்னவர் | சாந்தாராம் நாயக் |
தொகுதி | வடக்கு கோவா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கோவா, | 20 ஆகத்து 1923
இறப்பு | 12 சனவரி 2017 கோவா, இந்தியா | (அகவை 93)
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுரானே 1923 ஆகத்து 20 அன்று மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் பிறந்தார். இவரது தந்தை அணித்தலைவர் தத்தாஜி ராவ் போஸ்லே ஆவார். இவர் சத்தாரியைச் சேர்ந்த மேஜர் ஜோய்பா எஸ். ரானே சர்தேசாய் என்பவரை மணந்தார்.[1] இவர் வீர் சக்ரா விருது பெற்ற (மரணத்திற்குப் பின்), ஐந்தாவது கர்வால் படைப்பிரிவில் இரண்டாவது லெப்டினன்ட் ஜெயேந்திர ரானேவின் தாய் ஆவார். இவர் குவாலியரில் உள்ள கஜ்ரா ராஜே உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.[2]
அரசியல் வாழ்க்கை
தொகுரானே 1980 முதல் 1985 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் மகாராட்டிரவாதி கோமந்தக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கோவாவின் ஒரே பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இவரே. 1984 மற்றும் 1991 மக்களவைத் தேர்தல்களிலும் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[3] இவர் கோவா விடுதலைக்குப் பிந்தைய காலத்தின் தீவிர அரசியல்வாதியாக இருந்தார்.[1] தீவிர அரசியலில் நுழைந்த மிகச் சில பெண்களில் இவரும் ஒருவர்.[1]
ரானே ஒரு சமூக சேவகர் ஆவார். இவர் தரைப்படை நல மையம் (1952-59) மற்றும் பெண்கள் அமைப்பு, புஜ் (1953-59) ஆகிய இராணுவ நலன் மையத்தின் உறுப்பினராக இருந்தார். இவர் கோலாப்பூர் (1967-69) மகாராணி சாந்தாதேவி கைக்வாட் கிரக அறிவியல் நிறுவனம் செயலாளராகவும் பணியாற்றினார். ரானே 1974 முதல் கோவாவின் பிச்சோலிம் குடும்பம் மற்றும் குழந்தைகள் நல மையத்திலும், 1977 முதல் கோவா பெண்கள் உதவி மையக் கிளையின் உறுப்பினராகவும் இருந்தார். 1976ஆம் ஆண்டு முதல் வடக்கு கோவாவின் சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.
இறப்பு
தொகுரானே, தனது 96வது வயதில், வடக்கு கோவாவில் உள்ள கர்ச்சிரெம், சன்குலிமில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Goa, Team Digital. "Goa's First Lady Parliamentarian Sanyogita Rane No More | Digital Goa". digitalgoa.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-07-29. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
- ↑ "Members Bioprofile". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
- ↑ 3.0 3.1 "Ex MP Sanyogita Rane-Sardessai passes away". news.webindia123.com. Archived from the original on 2017-07-29. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.