சபினா கான் (Zabina Khan) இந்திய நாட்டினைச் சார்ந்த வடிவழகி, அழகு ராணி, நடிகை மற்றும் உதவி இயக்குநர் ஆவார். இவர் சபீன் கான் (Zabyn Khan) என்றும் அழைக்கப்படுகிறார்.[1][2][3][4][5]

சபினா கான்
அழகுப் போட்டி வாகையாளர்
பட்டம்
  • கிளாட்ரெக்சு மான் கன்டு மற்றும் மெகாமாடல் அழகு போட்டி
  • மிசு சுற்றுலா அழகி சர்வதேசம் 2004
முக்கிய
போட்டி(கள்)
மிசு சுற்றுலா அழகி சர்வதேசம் 2004

2004 ஆம் ஆண்டில் முதல் மிசு சுற்றுலா அழகி சர்வதேசம் என்ற பட்டம் பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

1985 ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் இசுலாமிய குடும்பத்தில் பிறந்தார்.

2004 ஆம் ஆண்டில் தனது 19 ஆவது வயதில், கிளாட்ராக்சு மேன்கன்டு மற்றும் மெகாமாடல் போட்டியில் பங்கேற்றார். மேலும் மிசு சுற்றுலா அழகி சர்வதேச முதல் பதிப்பில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற மிசு சுற்றுலா அழகி சர்வதேச முதல் பதிப்பில் போட்டியிட்டு இறுதியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்தப் போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக வெற்றி பெற்றவர் என்ற பெருமையும் பெற்றார்.

சபினா என்ற சபீன் கான் நடிகை மற்றும் உதவி இயக்குநர் ஆவார். குல்சுல் (2004 ஆம் ஆண்டு) ஏக் கசீனா ஏக் கிலாடி (2005 ஆம் ஆண்டு) பிளப் மாசுடர் (2005 ஆம் ஆண்டு) வேட்டையாடு விளையாடு (2006 ஆம் ஆண்டு) கோடவா (2007 ஆம் ஆண்டு) சகதம் (2007 ஆம் ஆண்டு) பங்கா நா லோ (2007 ஆம் ஆண்டு) ஆசிக் பனயா ஆப்னே (2007 ஆம் ஆண்டு) வில்லு (2008 ஆம் ஆண்டு) சஞ்சலம் (2011 ஆம் ஆண்டு) சிவாசி நகர் (2014 ஆம் ஆண்டு) போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆக்சன் சாக்சன் (2014 ஆம் ஆண்டு) சோலோ (2017 ஆம் ஆண்டு), நவ்ரசா (2021 ஆம் ஆண்டு) திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

தற்போது பிக் டாடி கேசினோ மற்றும் சிட்ரைக் கேசினோ படங்களில் பொழுதுபோக்கு இயக்குநராக பணியாற்றியுள்ளார். கோவாவில் 2019 ஆம் ஆண்டு தனது நிகழ்ச்சியான உங்கள் திறமை நிகழ்ச்சிக்கு பெயர் பெற்றவர் ஆனார்.

பிக் பாசு (2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை) மற்றும் சுதந்திர விழா (2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை) பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "2004 Miss Tourism Queen International". blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 19 June 2014.
  2. http://www.rmhb.com.cn/chpic/htdocs/english/content/200409/5-3.htm%7Ctitle=Miss Tourism Queen International 2004 Contest|website=rmbh.com.cn|access-date=19 June 2014
  3. http://www.chinadaily.com.cn/english/doc/2004-06/30/content_344307.htm%7Ctitle=Miss Tourism Queen International|website=chinadaily.com.cn|access-date=19 June 2014}}
  4. https://m.imdb.com/name/nm1930298/?ref_=nv_sr_srsg_0. {{cite web}}: Missing or empty |title= (help)
  5. http:// www. Navhindtimes. in/2019/09/09 பத்திரிக்கைகள்/bnc/கவுண்ட்டவுன்-டு-தி-யுவர்-ஸ்டேஜ்-யுவர் டாலென்ட்-போட்டி[1]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபினா_கான்&oldid=4162294" இலிருந்து மீள்விக்கப்பட்டது