சப்தமி கௌடா

இந்திய நடிகை

சப்தமி கௌடா (Sapthami Gowda) ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக கன்னடத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். 2020 ஆம் ஆண்டு துனியா சூரி இயக்கிய பாப்கார்ன் மங்கி டைகர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 2022 இல் ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா படத்தில் லீலாவாக நடித்ததற்காக அறியப்பட்டார்.

சப்தமி கௌடா
திரைப்பட வெற்றிவிழாக் கூட்டத்தில் சப்தமி கௌடா
பிறப்புபெங்களூர், இந்தியா
தேசியம் இந்தியா
கல்விகுடிசார் பொறியியல்
பணிநடிகை
அறியப்படுவதுகாந்தாரா

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

பெங்களூரில் பிறந்த சப்தமி, நீச்சற் போட்டிகளில் போட்டியிட்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.[1]

தொழில்

தொகு

இயக்குநர் துனியா சூரி இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான பாப்கார்ன் மங்கி டைகர் திரைப்படத்தில் சப்தமி கௌடா நடிகர் தனஞ்சயாவிற்கு நாயகியாக அறிமுகமானார். படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.[2] பின்னர் பரபரப்பூட்டும் திரைப்படமான காந்தாராவில் லீலாவாக நடித்தார். இப்படத்தில் இவரது கிராமத்து பெண்ணின் பாத்திரம் பாராட்டப்பட்டது.[3][4]

2023 ஆம் ஆண்டு விவேக் அக்னிஹோத்திரி இயக்கிய தி வாக்சின் வார் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கி வரும் யுவா என்ற கன்னடத் திரைப்படத்தில் அறிமுக நடிகர் யுவ ராஜ்குமாருடன் ( ராகவேந்திர ராஜ்குமாரின் மகன்) நடித்து வருகிறார்.[5] மேலும், அபிஷேக் அம்பரீஷுடன் இணைந்து எஸ். கிருஷ்ணா இயக்கி வரும் 'காளி' படத்திலும் நடிக்கிறார்.[6]

பிற பணிகள்

தொகு

கர்நாடக அரசின் "நன்னா மைத்ரி" திட்டத்தின் தூதராக சப்தமி நியமிக்கப்பட்டுள்ளார். இது கர்நாடகா முழுவதும் உள்ள இளம்பெண்களுக்கு மாதவிடாய் கோப்பைகளை விநியோகிக்க உதவுகிறது.[7] பார்வையற்றோருக்கான சமர்த்தனம் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட பார்வையற்றோருக்கான துடுப்பாட்டம் 2022 இன் 3வது இருபது20 உலகக் கோப்பைப் பதிப்பிற்கான விளம்பரத் தூதராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Did you know Kantara girl Sapthami Gowda is a National gold medalist in swimming?". OTTPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-03.
  2. "SIIMA Awards 2020: Dhananjay best actor and Love Mocktail best film among Kannada winners". TV9 Kannada. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
  3. "SIIMA Awards 2023: RRR, 777 Charlie win big; Jr NTR, Yash named Best Actors; Sreeleela and Srinidhi Shetty are Best Actresses". Indian Express. https://indianexpress.com/article/entertainment/telugu/siima-awards-2023-telugu-kannada-winners-list-jr-ntr-yash-rrr-kantara-8942103/lite/. 
  4. "Kantara Movie Review: Rishab Shetty offers a brilliant experience that should not be missed in theatres". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-03.
  5. "Kantara Actress Sapthami Gowda Joins The Cast Of Film Yuva, Has This To Say". News18 (in ஆங்கிலம்). 2023-03-09. பார்க்கப்பட்ட நாள் 2023-11-03.
  6. "Sapthami Gowda to star alongside Abhishek Ambareesh in Krishna's 'Kaali'". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-11-03.
  7. J A, Naina. "15,000 menstrual cups to be distributed under Shuchi–'Nanna Maithri' on Sept 11". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-03.
  8. Reddy, Y Maheswara (November 18, 2022). "Walk for visually impaired cricketers". Bangalore Mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-03.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்தமி_கௌடா&oldid=4114694" இலிருந்து மீள்விக்கப்பட்டது