காந்தாரா
காந்தாரா (Kantara) (மொழிபெயர்ப்பு: மாயக் காடு}, கன்னட மொழியில் 30 செப்டம்பர் 2022 அன்று திரையிடப்பட்ட பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும்.[1]இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது.
காந்தாரா | |
---|---|
இயக்கம் | ரிஷப் ஷெட்டி |
தயாரிப்பு | விஜய் கிரகந்தூர் |
கதை | ரிஷப் ஷெட்டி |
இசை | பி. அஜெனீஷ் லோக்நாத் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | அர்விந்த் எஸ். காஸ்யப் |
படத்தொகுப்பு | கே. எம். பிரகாஷ் ஷெட்டி |
கலையகம் | ஹொம்பாளே பிலிம்ஸ் |
விநியோகம் | கே ஆர் ஜி ஸ்டூடியோஸ் |
வெளியீடு | 30 செப்டம்பர் 2022 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
ஆக்கச்செலவு | ₹16 கோடிகள் |
மொத்த வருவாய் | ₹ 305 கோடிகள் |
ரிஷப் ஷெட்டி இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கி, நடித்துள்ளார். விஜய் கிரகந்தூர் படத்தைத் தயாரித்துள்ளார். படத்திற்கு இசை அமைப்பாளர் பி. அஜெனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். ரிஷப் ஷெட்டி, கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி, நடிகை சப்தமி கௌடா உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம், கர்நாடகா மாநிலத்தின் துளு நாட்டில் கொண்டாடப்படும் பூத கோலா எனும் தெய்வ வாக்கு கூறுபவர் தொடர்பான கதைக் கருவை கொண்டது.
வசூல் சாதனை
தொகுகாந்தார திரைப்படம், கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு அடுத்து, உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. [2]
திரை விமர்சனம்
தொகுஒரு மலை நாட்டு மன்னர் மன நிம்மதியின்றி நாட்டை விட்டு காட்டுக்குள் செல்கிறார். அங்கு மக்கள் வழிபடும் கற்சிலை ஒன்றைக் கண்டதும் நிம்மதி ஏற்படுகிறது. அவருக்குச் சொந்தமான அம்மலைப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு எழுதி கொடுத்து விட்டு சிலையை அரண்மனைக்கு கொண்டு வருகிறார். மன்னரின் இறப்பிற்குப் பினனர் மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள், அம்மலைப் பகுதியை, மலைவாழ் மக்களிடம் நல்லவர்கள் போல் நடித்து அவர்களின் காவல் தெய்வத்திடம் பூத கோல அருள்வாக்கு மூலமாகவே அதை மீட்க முயற்சி செய்கின்றனர். அவர்களது திட்டம் அறியும் மலைநாட்டு மண்ணின் மைந்தன் சிவா (ரிஷப் ஷெட்டி) என்ன செய்கிறார்? மன்னரின் வாரிசின் ஆசை நிறைவேறியதா, இல்லையா என்பதுதான் படம்.
தொன்மக் கதைகளின் வழியே, மக்களின் வாழ்விடங்களுக்கும், அதிகாரத்துக்கும் இடையில் ஆண்டாண்டு காலமாக நடக்கும் நில உரிமையை, எந்தவித பிரச்சாரமும் இன்றி படத்தின் இயக்குநர் திரைப்படம் மூலம் கூறியிருக்கிறார்.
காவல் தெய்வம், காட்டுப்பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள், மன்னராட்சியில் காடு வந்த பிறகு நடக்கும் கட்டுப்பாடுகள், கேள்விக் கேட்கப்படும் உரிமைகள், இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு என அனைத்தையும் காந்தாரா திரைப்படத்தின் மூலம் இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார்.
திரைப்படத்தில் கம்பளா எனும் எருமைப் போட்டி, அதைத் தொடர்ந்து நடக்கும் மோதல், எதிர்பார்ப்பது போலவே முதலாளி வில்லன், அம்மக்களின் பண்பாட்டுப் பின்னணி, திடீரென ஆட்டம் காட்டிப் போகும் காவல் தெய்வம், 1990-களின் வாழ்க்கை என காந்தாரா காட்டும் உலகம் வியக்க வைக்கிறது.[3]
திரைப்படத்தின் தாக்கம்
தொகுஇத்திரைப்படம் வெளியான பின்னர் 60 வயது கடந்த பூத கோலா நாட்டியக் கலைஞர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூபாய் 2,000 வழங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.[4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kantara Day 1 Box Office Collection: Rishab's Action Drama Opens With Decent Numbers". News.Indiaonline.
- ↑ காந்தாராவின் மொத்த பட்ஜெட் ரூ.16 கோடி; ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? - வியப்பில் திரையுலகம்
- ↑ காந்தாரா: திரை விமர்சனம்
- ↑ "Kantara, a film with impact: Karnataka Government announces monthly allowance for Daiva Narthakas". MSN. 20 October 2022. பார்க்கப்பட்ட நாள் 20 October 2022.