சப்பாத்திக் கள்ளி

தாவர இனம்
சப்பாத்திக் கள்ளி
Opuntia
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Opuntia

இனம்

Many, see text.

வேறு பெயர்கள்

and see text

சப்பாத்திக் கள்ளி (Opuntia) என்பது கள்ளி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும்.

பொதுவாகக் காணப்படும் சப்பாத்திக் கள்ளி என்பது இந்திய சப்பாத்திக் கள்ளி ( Indian fig opuntia (O. ficus-indica) என்ற சிற்றினமாகும். சமையலுக்கு பிரிக்கிளி சப்பாத்திக் கள்ளி இனத்தின் கனிகள் பயன்படுகிறன.

இந்த பேரினத்தை ஆங்கிலத்தில் குறிக்கும் பெயரான ஒபுன்டா என்பது பண்டைய கிரேக்க நகரான ஒபஸ் என்ற பெயரில் இருந்து பெறப்பட்டது. அங்கு சமையல் தேவைக்காக இவற்றை பயிரிட்டு வளர்த்தால் இப்பெயர் பெற்றது.[1]

பரவல் தொகு

பிற அனைத்து கள்ளி இனச்செடிகளைப்போல சப்பாத்திக் கள்ளியும் அமெரிக்காவைச் சேர்ந்தவையே, அங்கிருந்தே உலகின் பிற பகுதிகளுக்கு பரவியது. சப்பாத்திக் கள்ளி இனங்கள் மிகுதியாகக் காணப்படுவது மெக்சிக்கோ குறிப்பாக ( மெக்சிகோவின் மைய, மேற்கு பிராந்தியங்களில்), மற்றும் கரீபியன் தீவுகள் (மேற்கிந்தியத் தீவுகள்) ஆகும். ஐக்கிய அமெரிக்காவிலும் பல இடங்களில் சப்பாத்திக் கள்ளி இனங்கள் காணப்படுகின்றன, குறிப்பாக மேற்கு ஐக்கிய அமெரிக்காவின் , ராக்கி மலைத்தொடரில், Opuntia phaeacantha மற்றும் Opuntia polyacantha ஆகிய சப்பாத்திக் கள்ளி சிற்றினங்கள், மற்றும் தென்மேற்கு பாலைவனப்பகுதிகளில் பலவகையான சப்பாத்திக் கள்ளி சிற்றினங்கள் காணப்படுகின்றன, புலோரிடாவில் இருந்து கனெக்டிகட் / லாங் தீவு வரையிலான கிழக்கு கடற்கரை பகுதிகள் (Opuntia humifusa) இன சப்பாத்திக் கள்ளிகள் காணப்படுகின்றன. சப்பாத்திக் கள்ளிகள் தமிழ்நாட்டில் பரவலாக தரிசு நிலங்களிலும் வேளியோரங்களிலும் காணப்படுகின்றன.

விளக்கம் தொகு

 
சப்பாத்திக் கள்ளி அதன் பழங்களுடன் உருவியல்

முட்கள் நிறைந்தும், தட்டையாக, வட்டவடிவில் வளரக்கூடிய கள்ளிகளேயே சப்பாத்திக் கள்ளி என அழைக்கின்றனர். இவற்றில் இரண்டுவிதமான முட்கள் காணப்படுகின்றன அவை பெரிய முட்கள், மெல்லிய முட்கள் ஆகும். இதில் பெரிய முட்கள் தோலில் கடுமையாகக் குத்தி கிழிக்கககூடியனவாகவும், சிறியமுட்கள் குத்தி மாட்டிக் கொண்டால் எளிதில் அகற்ற இயலாததாகவும் இருக்கும்.

கலாப்சு தீவுகளில் ஆறு வெவ்வேறு இனங்கள் காணப்படுகின்றன. அவை: O. echios, O. galapageia, O. helleri, O. insularis, O. saxicola, O. megasperma ஆகும். இவை 14 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன; இவற்றில் பெரும்பாலானவை ஒருசில தீவுகளிலிலேயே உள்ளன. இதனாலேயை இவற்றைச் சிறந்த எடுத்துக்காட்டுகள் என அழைக்கின்றனர்.[2] கலாப்சு தீவுகள் சிலவற்றில் இராச்சத ஆமைகள் உள்ளன இந்த ஆமைகள் வாழக்கூடிய தீவுகளில் உள்ள சப்பாத்திக் கள்ளி இனங்கள் உயரமானவையாக உள்ளன. இராட்சத ஆமைகள் இல்லாத தீவுகளில் உள்ள சப்பாத்திக் கள்ளிகள் உயரம் குறைந்தவையாக உள்ளன. காரணம் இந்த இராட்சத ஆமைகளின் முதன்மை உணவுத் தேவைக்கு இந்தச் சப்பாத்திக் கள்ளிகளையே சார்ந்துள்ளன.

பழங்கள் தொகு

சப்பாத்திக் கள்ளியின் கனிகள் பச்சை நிறத்துடன் உள்ளவை இவை பழுத்தால் சிவப்பு நிறத்தை அடையும். இந்தப் பழங்களின் மேல் ஆங்காங்கே கொத்துக் கொத்தாக சிறிய முட்கள் இருக்கும். இந்த பழங்களைச் சிற்றூர்புறச் சிறுவர்கள் விரும்பி உண்பார்கள் பழத்தை எச்சரிக்கையாகப் பிடுங்கி அதை அதன் முட்கள் உள்ள பகுதியைக் கல்லில் தேய்த்து முட்களை அகற்றி பழத்தின் தோலை எடுத்து உள்ளே இருக்கும் விதைகள் நிறைந்த சதையை உண்பார்கள். பழத்தின் உள்ளே உண்ணக்கூடிய சதைப்பகுதி இரத்தச் சிவப்பாகவும், நல்ல இனிப்புச் சுவையுடனும் இருக்கும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Quattrocchi, Umberto (2000).
  2. Fitter, Fitter, and Hosking, Wildlife of the Galapagos (2000)
  3. தேவா பழனிச்சாமி (31 சூலை 2010). "சாதாரண விஷயம் – 10 – சப்பாத்திக் கள்ளி". அகம் புறம். பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்பாத்திக்_கள்ளி&oldid=3577123" இலிருந்து மீள்விக்கப்பட்டது