சப்பானிய வாலாட்டி

சப்பானிய வாலாட்டி
சப்பானில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பசாரிபார்மிசு
குடும்பம்:
மோட்டாசில்லிடே
பேரினம்:
மோட்டாசில்லா
இனம்:
மோ. கிராண்டிசு
இருசொற் பெயரீடு
மோட்டாசில்லா கிராண்டிசு
சார்ப்பி, 1885

சப்பானிய வாலாட்டி (Japanese wagtail)(மோட்டாசில்லா கிராண்டிசு) என்பது நெட்டைக்காலி மற்றும் வாலாட்டி குடும்பமான மோட்டாசிலிடேவினைச் சேர்ந்த பறவை சிற்றினமாகும். இதன் தாயகம் சப்பான் மற்றும் கொரியா ஆகும்.

விளக்கம்

தொகு

சப்பானிய வாலாட்டி சுமார் 20 செ.மீ. நீளமுடையன. ஆண் பெண் குருவிகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். இவை வெள்ளை அடிப்பகுதி மற்றும் மேல் பகுதி, தொண்டை மற்றும் முதுகு கருப்பு நிறத்துடன் காணப்படும். இவற்றின் சூப்பர்சிலியாவும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இவற்றின் அலகு கருப்பு நிறத்திலும் கால்களும் பாதமும் அடர் சாம்பல் நிறத்திலுள்ளன. இளம் குருவிகளின் இறகுகள் முதிர்ச்சியடைந்த குருவியினை விடச் சாம்பல் நிறமாக இருக்கும்.[2]

வகைப்பாட்டியல்

தொகு

இந்தப் பறவையின் சிற்றினப் பெயரான கிராண்டிசு என்பதற்கு இலத்தீன் மொழியில் பெரியது என்று பொருள்.[2]

பாதுகாப்பு

தொகு

சப்பானிய வாலாட்டி பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் தீவாய்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]

நடத்தை

தொகு

உணவு

தொகு

சப்பானிய வாலாட்டி பூச்சிகளை உண்ணுகின்றது.[2]

கூடு

தொகு

சப்பானிய வாலாட்டிகள் பெரிய குழுக்களாக மரங்களில் ஒன்றாகக் கூடுகின்றன.[2]

இனப்பெருக்கம்

தொகு

தண்ணீருக்கு அருகில் உள்ள துவாரங்களில் கூடு கட்டுகிறது. பெற்றோர்கள் இருவரும் முட்டைகளையும் குஞ்சுகளையும் கவனித்துக்கொள்கின்றன. ஒவ்வொரு கூட்டிலும் நான்கு முதல் ஆறு முட்டைகள் இடும்.[2]

பரவல்

தொகு

இதன் தாயகம் சப்பான் மற்றும் கொரியா ஆகும். தைவான், கிழக்கு சீனா மற்றும் தூர கிழக்கு ரஷ்யாவில் அலைந்து திரிபவைகளாகப் இப்பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது உள்நாட்டு ஈரநிலங்களிலும், விளை நிலங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழ்கிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 BirdLife International (2018). "Motacilla grandis". IUCN Red List of Threatened Species 2018: e.T22718360A132117451. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22718360A132117451.en. https://www.iucnredlist.org/species/22718360/132117451. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Japanese Wagtail". Birds of the World. Archived from the original on 2020-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்பானிய_வாலாட்டி&oldid=3537532" இலிருந்து மீள்விக்கப்பட்டது