சப்போரிசுக்கா அணுமின் நிலையம்

சப்போரிசுக்கா அணுமின் நிலையம் (Zaporizhzhia Nuclear Power Station, உக்ரைனியன்: Запорізька АЕС) உக்ரைனில் எனர்கதார் நகரில் உள்ளது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமும், உலகின் 10 பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்றுமாகும். 1985 இல் சோவியத் ஒன்றியத்தினால் நிறுவப்பட்ட இந்த் அணு உலை, தென்கிழக்கு உக்ரைன் நாட்டின் சப்போரியா மாகாணத்தின் எனர்கதார் நகரில், தினேப்பர் ஆற்றின் தெற்குக் கரையில் உள்ளது.

சப்போரிசுக்கா அணுமின் நிலையம்
Zaporizhzhia Nuclear Power Station
இடதுபுறத்தில் இரண்டு குளிரூட்டும் கோபுரங்களும் (ஒன்று பெரும்பாலும் மற்றொன்றால் மறைக்கப்படுகின்றது), அணுமின் நிலையத்தின் ஆறு அலகுகளும் நிக்கோபோல் கரையிலிருந்து பார்க்கப்படுகின்றன. இரண்டு உயரமான புகைமண்டலங்கள் அணுமின் நிலையத்திற்கு அப்பால் உள்ள சப்போரிசுக்கா அனல் மின் நிலையத்தில் உள்ளன.
நாடுஉக்ரைன்
அமைவு47°30′30″N 34°35′04″E / 47.50833°N 34.58444°E / 47.50833; 34.58444
நிலைசெயல்படுகிறது, உருசியாவின் கட்டுப்பாட்டில்
அமைப்பு துவங்கிய தேதிஅலகு 1: 1 ஏப்ரல் 1980
அலகு 2: 1 சனவரி 1981
அலகு 3: 1 ஏப்ரல் 1982
அலகு 4: 1 ஏப்ரல் 1983
அலகு 5: 1 நவம்பர் 1985
அலகு 6: 1 சூன் 1986
இயங்கத் துவங்கிய தேதிஅலகு 1: 25 திசம்பர் 1985
அலகு 2: 15 பெப்ரவரி 1986
அலகு 3: 5 மார்ச் 1987
அலகு 4: 14 ஏப்ரல் 1988
அலகு 5: 27 அக்டோபர் 1989
அலகு 6: 17 செப்டம்பர் 1996
உரிமையாளர்எனெர்கோஆத்தம்
இயக்குபவர்எனெர்கோஆத்தம்

இந்நிலையத்தில் 6 VVER-1000 அழுத்த நீர் அணு உலைகள் (PWR) உள்ளன, ஒவ்வொன்றும் 235U (LEU) மூலம் எரிபொருளாகக் கொண்டு[1] 950 MWe உற்பத்தி செய்கிறது. மொத்த உற்பத்தி 5,700 MWe ஆகும்.[2] முதல் ஐந்து அலகுகளும் 1985 இற்கும் 1989 இற்கும் இடையில் தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டது, ஆறாவது அலகு 1995 இல் சேர்க்கப்பட்டது. இந்த ஆலை அணுசக்தியிலிருந்து பெறப்பட்ட நாட்டின் மின்சாரத்தில் கிட்டத்தட்ட பாதியை உற்பத்தி செய்கிறது.[3] அத்துடன் உக்ரைனில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் இது ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.[4]

இவ்வணுமின் நிலையத்திற்கருகே சப்போரிசுக்கா அனல்மின் நிலையம் அமைந்துள்ளது. 2022 மார்ச் 4 இல், இவ்விரண்டு மின் நிலையங்களும் உருசியப் படையினரால் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது கைப்பற்றப்பட்டது.[5][6][7][8]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Kosourov, E.; Pavlov, V.; Pavlovcev, A.; Spirkin, E. (2003), Improved VVER-1000 fuel cycle (PDF), மாஸ்கோ, உருசியா: RRC Kurchatov Institute, பார்க்கப்பட்ட நாள் 5 March 2022
  2. "Nuclear Power Plants in Lithuania & Ukraine". Industcards.com. Archived from the original on 9 December 2012. பார்க்கப்பட்ட நாள் 31 August 2010.
  3. "Zaporozhe 3 enters next 10 years of operation". World Nuclear News. 7 November 2017 இம் மூலத்தில் இருந்து 7 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107183055/http://www.world-nuclear-news.org/RS-Zaporozhe-3-enters-next-10-years-of-operation-07111701.html. 
  4. "SS "Zaporizhzhia NPP"". www.energoatom.com.ua. Archived from the original on 27 October 2020. பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.
  5. Polityuk, Pavel; Vasovic, Aleksandar; Irish, John (2022-03-04). "Russian forces seize huge Ukrainian nuclear plant, fire extinguished" (in en). Reuters இம் மூலத்தில் இருந்து 4 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220304100517/https://www.reuters.com/markets/europe/top-wrap-1-europes-largest-nuclear-power-plant-fire-after-russian-attack-mayor-2022-03-04/. 
  6. Daniel Ten Kate, David Stringer (2022-03-04). "Russian Forces Occupy Site of Nuclear Plant as Fire Contained". Bloomberg. Archived from the original on 4 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
  7. Boynton, Sean (4 March 2022). "Russian troops capture Europe's largest power plant in Ukraine after intense battle". Global News இம் மூலத்தில் இருந்து 4 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220304062939/https://globalnews.ca/news/8658032/ukraine-russia-nuclear-plant-fire/. 
  8. "Russia Seizes Ukraine Nuclear Plant Hours After Attack: 10 Points". NDTV.com. Archived from the original on 4 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.

வெளி இணைப்புகள்

தொகு