முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஒரே அணுவெண்ணையும் வேறுபட்ட திணிவெண்ணையும் கொண்ட ஒரே மூலக அணுக்கள் ஓரிடத்தான் அல்லது சமதானி (isotope) எனப்படும். ஒரு தனிமத்தின் ஓரிடத்தான்களின் அணுக்கருக்களில் ஒரேயளவு எண்ணிக்கையான புரோத்தன்களே (புரோட்டான்) இருக்கும். ஆனால், நியூத்திரன்களின் (நியூட்ரான்) எண்ணிக்கை வேறுபடும். இதனால் ஒரே தனிமத்தின் ஓரிடத்தான்கள் வெவ்வேறு திணிவெண்களைக் கொண்டவையாக இருக்கின்றன.

அணுக்கருவியல்
CNO Cycle.svg
கதிரியக்கம்
அணுக்கரு பிளவு
அணுக்கரு பிணைவு
இயற்கையில் காணப்படும் ஐதரசன் அணுக்களின் ஓரிடத்தான்கள். புரோட்டான்(சாதாரண ஐதரசன்), டியூட்டிரியம்(கன ஐதரசன்), டிரிட்டியம்(கதிரியக்க ஐதரசன்)

சிறப்பியல்புகள்தொகு

  • ஒரே தனிமத்தின் ஐசோடோப்புகள், அவற்றின் நிறை எண்களில் மட்டும் வேறுபடுகின்றன.
  • நியூட்ரான்களின் எண்ணிக்கை வேறுபடுவதால், அவற்றின் நிறை எண்களும் வேறுபடுகின்றன.
  • ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் ஒத்த வேதியியல் பண்புகளைப் பெற்றுள்ளன.
  • எனினும், இயற்பியல் பண்புகளில் ஐசோடோப்புகள் சிறிது மாறுபடுகின்றன.
  • ஐசோடோப்புகளைக் கொண்டுள்ள தனிம அணுக்கள், பின்ன அணு நிறைகளைப் பெற்றுள்ளன.

பயன்பாடுகள்தொகு

மருத்துவத் துறையில் பல தனிம ஒரிடத்தான்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் சில சமதானிகள்:

காபன் - 612C 613C 614C

குளோரின் - 1735Cl 1737Cl

கந்தகம் - 1632S 1635S

ஒட்சிசன் - 816O 817O 818O

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரிடத்தான்&oldid=2740682" இருந்து மீள்விக்கப்பட்டது