சமாரிண்டா

இந்தோனேசியாவின் கிழக்குக் களிமந்தான் மாகாணத்தின் தலைநகரம்

சமாரிண்டா நாடு இந்தோனேசியாவின் கலிமந்தான் தீவில் அமைந்துள்ளது . இது கிழக்கு கலிமந்தான் மாகாணத்தின் தலை நகரமாகும். அருகாமையில் இருக்கும் ஒரு இந்துக் கோயிலின் கல் வெட்டில் இருந்து அறியக் கூடியதாவது ஐந்தாம் நூற்றாண்டில் இங்கு இந்தியர்கள் குடியேறி உள்ளனர் என்பதே. ஆயினும் 1668 இற் தீவின் தென்பகுதியில் இருந்து வந்த மக்கள் இங்கு குடியேறி உள்ளனர். 1846 இல் ஒல்லாந்தர் இந்த நகரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். 1959 இல் அந்நாட்டு அதிபர் ஏற்படுத்திய ஒரு சட்டம் காரணமாக இந்நகர மக்கட்டொகை வேகமாக வளரத் தொடங்கியது. 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே இந்த நகரத்தின் சனத்தொகை சுமார் 5000 ஆகவே இருந்தது ஆயினும் இன்று சுமார் அறுநூறாயிரத்திற்குக் கிட்டிய மக்கட் தொகையினர் இந்த நகரில் வசிக்கின்றனர். இந்த நகரின் வளர்ச்சி வீதம் சுமார் 4.4 ஆகும் இது தேசிய வளர்ச்சியிலும் அதிகமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரிண்டா&oldid=1475511" இலிருந்து மீள்விக்கப்பட்டது