சமாரியம்(III) அயோடைடு

வேதிச் சேர்மம்

சமாரியம்(III) அயோடைடு (Samarium(III) iodide) என்பது SmI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் ஐதரயோடிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2] ஆரஞ்சு-மஞ்சள் நிறப்படிகங்களாக உருவாகும் இது தண்ணீரில் சிதைவடையும்.

சமாரியம்(III) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
மூவயோடோசமாரியம், சமாரியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
13813-25-7 Y
75179-64-5 (நோனாநீரேற்று) Y
InChI
  • InChI=1S/3HI.Sm/h3*1H;/q;;;+3/p-3
    Key: XQKBFQXWZCFNFF-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83746
  • I[Sm](I)I
பண்புகள்
SmI
3
வாய்ப்பாட்டு எடை 531.1
தோற்றம் ஆரஞ்சு-மஞ்சள் படிகங்கள்
உருகுநிலை 850 °C (1,560 °F; 1,120 K)
நீரில் சிதையும்
தீங்குகள்
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

உலோக சமாரியம் அயோடினுடன் வினைபுரிந்து சமாரியம்(III) அயோடைடு உருவாகும்.:[3]

 

இயற்பியல் பண்புகள்

தொகு

சமாரியம்(III) அயோடைடு தண்ணிரில் நீராற்பகுப்படைந்து சிதைவடையும். ஆரஞ்சு-மஞ்சள் நிறப்படிகங்களாக உருவாகும்.

வேதிப் பண்புகள்

தொகு

உலோக சமாரியத்துடன் சமாரியம்(III) அயோடைடை சேர்த்து சூடாக்கினால் சமாரியம் ஈரயோடைடு உருவாகும்.:[4]

 

சமாரியம்(III) அயோடைடு ஐதரசனுடன் ஒடுக்க வினையில் ஈடுபட்டு சமாரியம் ஈரயோடைடாக மாறுகிறது.

 

பயன்கள்

தொகு

வணிக முறையில் கிடைக்கும் சமாரியம்(III) அயோடைடு கரிம வேதி வினைகளில் ஒரு வினையூக்கியாகப் பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Zhang, Yuanmin (6 November 2011). "Samarium Triiodide". Synlett (in ஆங்கிலம்). pp. 1638–1639. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1055/s-0030-1260781. பார்க்கப்பட்ட நாள் 8 August 2021.
  2. "Samarium(III) Iodide". American Elements (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 8 August 2021.
  3. Molodkin, A. K.; Karagodina, A. M.; Tupolev, V. S.; Dudareva, A. G.; Prokhina, A. G. (1984). "Iodination of samarium and reaction of samarium triiodide with lithium iodide" (in Russian). Zhurnal Neorganicheskoj Khimii 29 (4): 1069–1072. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-457X. https://inis.iaea.org/search/search.aspx?orig_q=RN:16037389. பார்த்த நாள்: 8 August 2021. 
  4. Imamoto, Tsuneo; Ono, Mitsumasa (5 March 1987). "The Reaction of Samarium(III) Iodide with Samarium Metal in Tetrahydrofuran, A New Method for the Preparation of Samarium(II) Iodide". Chemistry Letters 16 (3): 501–502. doi:10.1246/cl.1987.501. பன்னாட்டுத் தர தொடர் எண்:0366-7022. https://www.journal.csj.jp/doi/10.1246/cl.1987.501. பார்த்த நாள்: 8 August 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்(III)_அயோடைடு&oldid=3347138" இலிருந்து மீள்விக்கப்பட்டது