சமாரியம் ஆக்சியயோடைடு


சமாரியம் ஆக்சியயோடைடு (Samarium oxyiodide) என்பது SmOI என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியம்(II) அயோடைடுடன் உலர் ஆக்சிசனைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் சமாரியம் ஆக்சியயோடைடு சேர்மத்தைப் பெறலாம். காற்றில் 335 °செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தினால் இது ஆக்சிசனேற்றம் அடைகிறது. மேலும் 460 °செல்சியசு, 560 °செல்சியசு மற்றும் 640 °செல்சியசு வெப்பநிலைகளுக்கு சூடுபடுத்தப்பட்டால் nSmOI·Sm2O3 சேர்மங்கள் உருவாகின்றன. வாய்ப்பாட்டிலுள்ள n என்பது முறையே 7, 4, 2 என்ற எண்களைக் குறிக்கிறது. மேலும் 885 °செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தினால் முழுமையாக சமாரியம் ஆக்சைடாக மாறுகிறது.[2] சமாரியம் ஆக்சியயோடைடு புரோப்பைலீன் ஆக்சைடு வழிப்பெறுதிகளை மெத்தில் கீட்டோன்களாக மறுசீரமைக்க உதவுகிறது.[3] சமாரியம்(III) அயோடைடு, சோடியம் அயோடைடு மற்றும் சோடியம் ஆகியவற்றுடன் 903 கெல்வின் வெப்பநிலையில் தாண்டலம் கொள்கலனில் வினைபுரிந்து கருப்பு நிறத்திலான Sm4OI6 சேர்மத்தைக் கொடுக்கிறது.[4]

சமாரியம் ஆக்சியயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சமாரியம் அயோடைடு ஆக்சைடு
இனங்காட்டிகள்
60763-35-1 Y
InChI
  • InChI=1S/HI.O.Sm/h1H;;/q;-2;+3/p-1
    Key: CGXYQWRVSQQLMC-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [Sm+3].[O-2].[I-]
பண்புகள்
IOSm
வாய்ப்பாட்டு எடை 293.26 g·mol−1
தோற்றம் இலேசான பால் மஞ்சள் திண்மம்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சமாரியம் ஆக்சிசல்பைடு
சமாரியம் ஆக்சிகுளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 刘书珍; 李有谟; 李继文; 陈明玉. 稀土碘氧化物的制备和X-射线分析. 应用化学. 1988. 5 (3): 64-66.
  2. J. P. K. Hölsä (1982-10-01). "Thermal stabilities of selected rare earth oxyiodides" (in en). Journal of Thermal Analysis 25 (1): 127–133. doi:10.1007/BF01913061. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-4466. http://link.springer.com/10.1007/BF01913061. பார்த்த நாள்: 2023-03-16. 
  3. J. Prandi, J.L. Namy, G. Menoret, H.B. Kagan (1985-04-01). "Selective catalyzed-rearrangement of terminal epoxides to methyl ketones" (in en). Journal of Organometallic Chemistry 285 (1–3): 449–460. doi:10.1016/0022-328X(85)87389-7. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022328X85873897. பார்த்த நாள்: 2023-03-16. 
  4. Stefanie Hammerich, Ingo Pantenburg, Gerd Meyer (2005-11-15). "Tetrasamarium(II) oxide hexaiodide, Sm 4 OI 6". Acta Crystallographica Section E: Structure Reports Online 61 (11): i234–i236. doi:10.1107/S1600536805031934. பன்னாட்டுத் தர தொடர் எண்:1600-5368. https://scripts.iucr.org/cgi-bin/paper?S1600536805031934. பார்த்த நாள்: 2023-03-16. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்_ஆக்சியயோடைடு&oldid=3803926" இலிருந்து மீள்விக்கப்பட்டது