சமீரா இப்ராகிம்

பெண்கள் உரிமை ஆர்வலர்

சமீரா இப்ராகிம் (Samira Ibrahim) ( அரபு மொழி: سميرة إبراهيم‎ ) (பிறப்பு 1987கள்) எகிப்திய புரட்சியின்போது முக்கியத்துவம் பெற்ற ஒரு எகிப்திய ஆர்வலர் ஆவார்.

கணிணி வரைகலையில் சமீரா இப்ராகிமின் முகம்.

தஹ்ரீர் சதுக்கப் போராட்டமும், பின்விளைவுகளும் தொகு

மார்ச் 9, 2011 அன்று, கெய்ரோவிலுள்ள தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றார். போராட்டக்காரர்களை இராணுவம் தாக்கிக் கலைத்தது. இவரையும் மற்ற பெண்களையும் அடித்துத் துன்புறுத்தினர். மின்சார அதிர்ச்சியளித்தும், ஆடையினுள் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தேடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. மேலும், இது வீரர்களால் கானொலியாகவும் எடுக்கப்பட்டது. இவர்கள் கன்னித்தன்மை சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். கற்பழிப்பு குற்றச்சாட்டுகளிலிருந்து வீரர்களைப் பாதுகாப்பதற்காக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக பின்னர் இராணுவம் கூறியது.

நீதிமன்றத்தில் வழக்கை கொண்டு செல்வதில் வெற்றி பெற்ற பிறகு, திசம்பர் 2011 இல் "கன்னித்தன்மை சோதனைகள்" நடைமுறையை நிறுத்த நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், மார்ச் 2012 இல், ஒரு இராணுவ நீதிமன்றம் இப்ராகிமின் கன்னித்தன்மை சோதனை தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து மருத்துவர் அடெல் எல் மோகியை விடுவித்தது.[1][2] இப்ராகிம் தனது வழக்கை சர்வதேச நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்வதாக உறுதி பூண்டார்.[3]

2013 துவிட்டர் குற்றச்சாட்டுகள் தொகு

மார்ச்சு 2013 ஆரம்பத்தில், தி வீக்லி சிடாண்டட்டு என்ற பத்திரிக்கையில் எழுதிய சாமுவேல் தாற்றோசு என்பவர் இவரது துவிட்டர் கணக்கில் யூத-விரோத மற்றும் அமெரிக்க எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டிய பின்னர் இவர் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த அறிக்கைகளில் இட்லரை மேற்கோள் காட்டுவதாக இருந்தது: "யூதர்கள் சம்பந்தப்பட்டிருப்பதைத் தவிர, ஒழுக்கத்திற்கு முரணான எந்தச் செயலும், சமுதாயத்திற்கு எதிரான குற்றமும் நடக்கவில்லை என்பதை நான் நாட்களைக் கடந்து கண்டுபிடித்தேன்-இட்லர்." பல்காரியாவில் இசுரேலியர்களின் பேருந்து மீது தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, "இன்று மிகவும் இனிமையான செய்திகளைக் கொண்ட மிக இனிமையான நாள்" என்று இவர் எழுதினார். 2012ஆம் ஆண்டு [[செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்|செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களின்]] ஆண்டு விழா. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா எரியும்".[4] [5] [6]

இதன் பின்னர், இவருக்கு சர்வதேச வீரதீரப் பெண்கள் விருதை வழங்கப்போவதில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது. [7] [8] ஆரம்பத்தில், இப்ராகிம் தனது டுவிட்டர் கணக்கு "முன்பே திருடப்பட்டது" என்றும் "இனவெறி பற்றியும், இனவெறுப்புப் பற்றியும் தான் எவ்வித துவீட்டும்செய்யவில்லை" என்றும் கூறினார்.[9] இருப்பினும், பின்னர், "அமெரிக்க அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் எனது முந்தைய சீயோனிச எதிர்ப்பு அறிக்கைகள் குறித்து அமெரிக்காவிலுள்ள சீயோனிசவாதிகளிடம் நான் மன்னிப்பு கேட்க மறுத்தேன். எனவே அவர்கள் விருதை திரும்பப் பெற்றனர்" என்று கூறினார்.[10] பின்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை இவர் அமெரிக்காவை விட்டு எகிப்துக்குத் திரும்பியதாகக் கூறியது.[11] [12]

மார்ச்சு 8, 2013 அன்று, அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர், "மேலும் பரிசீலனைக்குப் பிறகு, "அமெரிக்க பிரதிநிதிரிகள்" என்ற பிரிவில் விருது வழங்குவதில்லை என்று துறை முடிவு செய்துள்ளது எனவும், இப்ராகிம் கூறும் சில பொது அறிக்கைகளை கருத்தில் கொள்ளவில்லை" எனவும் கூறினார்.[13]

மேற்கோள்கள் தொகு

  1. "What made her go there? Samira Ibrahim and Egypt's virginity test trial". Aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19.
  2. The World's 100 Most Influential People: 2012 - Samira Ibrahim by Charlize Theron, Time Magazine, Wednesday, April 18, 2012.
  3. Abdel-Rahman Hussein in Cairo (March 13, 2012). "'The future of Egyptian women is in danger' - Samira Ibrahim speaks out". Guardian (London). https://www.theguardian.com/lifeandstyle/2012/mar/13/women-samira-ibrahim-egypt-virginity-tests/print. பார்த்த நாள்: 2013-05-19. 
  4. "Michelle Malkin Takes on State Department for Honoring Samira Ibrahim, Woman Who Praised 9/11". Fox News. March 7, 2013. Archived from the original on April 10, 2013. பார்க்கப்பட்ட நாள் March 7, 2013.
  5. "Activist Samira Ibrahim denied International Women of Courage prize over anti-US tweets". Associated Press (reprinted in The Indian Express). March 8, 2013.
  6. The tweets that cost Samira Ibrahim her State Department award by Caitlin Dewey, Washington Post, March 8, 2013.
  7. "US postpones award to honor Egyptian woman activist in light of anti-US, anti-Semitic tweets" இம் மூலத்தில் இருந்து 2019-07-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190725235347/https://www.washingtonpost.com/politics/us-reverses-decision-to-honor-egyptian-woman-activist-in-light-of-anti-us-anti-semitic-tweets/2013/03/07/e3d3b8dc-875b-11e2-a80b-3edc779b676f_story.html. 
  8. "US revokes award for Egyptian woman due to tweets". Ynetnews.com. 8 March 2012. பார்க்கப்பட்ட நாள் 8 March 2012.
  9. "Michelle Obama and John Kerry to Honor Anti-Semite and 9/11 Fan". March 6, 2013 இம் மூலத்தில் இருந்து மார்ச் 24, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://wayback.archive-it.org/all/20130324130812/http://www.weeklystandard.com/blogs/michelle-obama-and-john-kerry-honor-anti-semite-and-911-fan_706547.html. 
  10. Samira Ibrahim 'Refuses to Apologize' for Her Tweets by Jeffrey Goldberg, The Atlantic, March 7, 2013.
  11. "Samira Ibrahim acknowledges 'anti-Zionist' tweet". Jewish Telegraphic Agency (JTA). March 8, 2013. Archived from the original on March 11, 2013.
  12. "Samira Ibrahim". Snopes.com.
  13. "US cancels award for Samira Ibrahim after incendiary tweets". Egypt Independent. March 9, 2013.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமீரா_இப்ராகிம்&oldid=3574103" இலிருந்து மீள்விக்கப்பட்டது