2011 சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதி கணக்கெடுப்பு

சமூகப் பொருளாதாராம் மற்றும் சமூகக் கணக்கெடுப்பு (Socio Economic and Caste Census 2011 (SECC) 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மேற்கொள்ளப்பட்டது.[1][2][3][4][5][6][7][8][9][10]அனைத்து இந்திய மாநிலங்களிலும், நடுவண் ஒன்றியப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட, 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, திரட்டப்பட்ட இந்தியச் சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதி கணக்கெடுப்பின் அறிக்கையை, இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 3 சூலை 2015 அன்று வெளியிட்டார்.[11][12][13]

2011 சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதி கணக்கெடுப்பு
நாடுஇந்தியா
பிரதமர்மன்மோகன் சிங்
Ministryகிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்
துவங்கியதுசங்கோலா கிராமம், மேற்கு திரிப்புரா மாவட்டம்

சூலை 2015-இல் சாதிக் கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது தொகு

2011-ஆம் ஆண்டின் சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதிக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 46,73,034 வகைப்பட்ட சாதிகள், உட்சாதிகள், பல்வேறுபட்ட குலப்பெயர்கள், கோத்திரங்கள், இனக்குழுக்களின் பெயர்கள் கண்டறியப்பட்டது.[14][15][16][17][18][19]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் ஊரகப்பகுதிகளில் 11.65 இலட்சம் மக்கள் வீட்டற்றவர்களாக அறியப்பட்டது. ஆனால் சமூகப் பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பின்படி, 6.1 இலட்சம் மக்கள் மட்டுமே வீடற்றவர்களாக அறியப்பட்டது.

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 18.46% (அல்லது 15.88 கோடி) மற்றும் 10.97% (9.27 கோடி), மற்றவர்கள் 68.52% மற்றும் சாதி, சமயமற்றவர்களின் எண்ணிக்கை 2.04% (36.57 இலட்சம்) ஆக இருந்தது.[20]

2011-ஆம் ஆண்டின் சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதி கணக்கெடுப்பு அறிக்கை தொகு

  • இந்தியாவின் 24.3 கோடி (243.9 மில்லியன்) குடியிருப்புகளில் 17.91 கோடி (179.1 மில்லியன்) குடியிருப்புகள் ஊரகப் பகுதிகளில் இருந்தது. அவைகளில் 10.69 கோடி குடியிருப்புகள் ஏழ்மை நிலையில் இருந்ததாக கண்டறியப்பட்டது.[21]
  • 5.37 கோடி (29.97%) ஊரகக் குடியிருப்பாளர்களுக்கு சொந்த நிலம் இல்லை. மேலும் உடல் உழைப்புத் தொழிலால் மட்டுமே வருவாய் ஈட்டும் நிலையில் இருந்தனர்.
  • 2.37 கோடி (13.25%) ஊரகக் குடியிருப்புகள் ஒற்றை அறை கொண்டதாக இருந்தது.
  • ஊரகப் பகுதிகளில் உள்ள 3.86 கோடி (21.53%) குடியிருப்புகளில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினராகவே இருந்தனர்.
  • 56% ஊரக குடியிருப்பினர்களுக்கு சொந்த வேளாண்மை நிலைம் இல்லை.[22][23]
  • 884 மில்லியன் ஊரக மக்களில் 36% விழுக்காடினர் எழுதப்படிக்க தெரியாதவர்களாக இருந்தனர்.[24]
  • 64% ஊரக மக்கள் தொடக்கப் பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்தியர்களாக உள்ளனர்.
  • 17.91 கோடி ஊரக குடியிருப்புகளில் 60% விழுக்காடு ஏழ்மை நிலையில் இருந்தது.[25]
  • 35% நகரக் குடியிருப்புகள் ஏழ்மை நிலையில் இருந்தது.[26][27]
  • 74.5% (13.34 கோடி) ஊரக குடியிருப்பாளர்களின் மாத வருமானம் ரூபாய் 5,000 என்பது அதிகபட்சமாக இருந்தது.[28][29]
  • 5.4% ஊரக மக்கள் உயர்நிலை பள்ளிக் கல்வியை (பத்தாம் வகுப்பு) முடித்தவர்களாக உள்ளனர்.
  • 3.4% ஊரக மக்களில் ஒருவர் மட்டுமே பட்டதாரியாக இருந்தார்.[30]
  • ஊரக மக்களில் 4.6% மட்டுமே வருமான வரி கட்டினர்.
  • ஊரக மக்களில் 14% மட்டுமே அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்த்தனர்.
  • 1,80,657 ஊரக மக்கள் கழிவுகளை கையால் அள்ளும் பணியில் இருந்தனர். இதில் மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், திரிபுரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கையால் கழிவுகளை அல்லும் பணியாளர்கள் அதிகம் கொண்டிருந்தனர்.[31]
  • ஊரக மக்கள்தொகையில் 48% மேற்பட்டோர் பெண்கள் ஆவர்.[32]
  • 121.08 கோடி இந்திய மக்கள்தொகையில் 44.72 கோடி ஊரக மக்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்.[33]
  • ஊரக மக்கள்தொகையில் 0.1% விழுக்காடினர் திருநங்கைகள் ஆவார்.
  • இராணுவம் மற்றும் துணைநிலை இராணுவப்படைகளில் ஊரகப் பகுதி மக்கள் அதிகம் பணியாற்றுகிறார்கள்.
  • 1% ஊரக மக்கள் தரைவழி தொலைபேசி கொண்டுள்ளனர். 68.35% கைப்பேசிகள் வைத்துள்ளனர்.[34]

சமயங்களும், சமூகங்களும் தொகு

சமயங்களும், சமூகங்களும் %
சமயம்/சாதி பட்டியல் சமூகத்தினர் பட்டியல் பழங்குடிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முன்னேறிய வகுப்பினர்|பொதுப்பிரிவினர்|பிறர்
இந்து சமயம் 22.2% 9% 42.8% 26%
இசுலாம் 0.8% 0.5% 39.2% 59.5%
கிறித்தவம் 9.0% 32.8% 24.8% 33.3%
சீக்கியம் 30.7% 0.9% 22.4% 46.1%
சமணம் 0.0% 2.6% 3.0% 94.3%
பௌத்தம் 89.5% 7.4% 0.4% 2.7%
சொராட்டியம் 0.0% 15.9% 13.7% 70.4%
பிறர் 2.6% 82.5% 6.25 8.7%
மொத்தம் 19.7% 8.5% 41.1% 30.8%

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Socio Economic and Caste Census for 2011 : Five key takeaways".
  2. Sabnavis, Madan. "The many shades of deprivation". @businessline.
  3. "Socio Economic Caste Census: In villages, one in three households in poverty; over a fifth SC/STs". 25 June 2015.
  4. "THE BIGGER PICTURE: How we can save the nation's farmers". Mail Online. 7 July 2015.
  5. Saumya Tewari, IndiaSpend com. "670 million people in rural India live on Rs 33 per day". Scroll.in.
  6. Vijayanunni, M. (15 July 2015). "Where is the caste data?" – via www.thehindu.com.
  7. "After Lalu and Nitish, Congress demands release of caste data in poll-bound Bihar | Patna News - Times of India". The Times of India.
  8. "Opinion: Modi Must Release Caste Survey Findings". NDTV.com.
  9. "7 in 10 homes rural, most live on less than Rs 200 a day, reveals new socio-economic census". 4 July 2015.
  10. "BJP may have second thoughts on caste census?". 28 May 2010 – via www.thehindu.com.
  11. "Govt releases socio-economic and caste census for better policy-making". Hindustan Times. 3 July 2015.
  12. Mehra, Puja (6 July 2015). "Jaitley: our priority is to eliminate deprivation" – via www.thehindu.com.
  13. Roche, Prashant K. Nanda,Anuja,Elizabeth (16 July 2015). "Arun Jaitley refutes charges of withholding caste census data". www.livemint.com.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  14. Bureau, National (29 July 2015). "8 crore errors found in caste data: government" – via www.thehindu.com.
  15. "Cabinet meeting: Panagariya to head panel to 'classify' caste census data". 17 July 2015.
  16. "Classifying caste census data could be Panagariya's toughest job". Hindustan Times. 18 July 2015.
  17. "Socio-economic census 2011 reveals 46 lakh castes, sub-castes". Deccan Herald. 17 July 2015.
  18. http://www.abplive.in/india/2015/07/16/article652176.ece/Caste-census-data-to-be-released-Government
  19. "Into the caste cauldron". Mumbai Mirror.
  20. Yadav, Anumeha. "Before releasing caste numbers, the government needs to account for discrepancies in data". Scroll.in.
  21. "Census 2011 data released: 10 key highlights | India News - Times of India". The Times of India.
  22. "Twice as many: census springs landless surprise". www.telegraphindia.com.
  23. "Half of rural India still doesn't own agricultural land: SECC 2011". 9 September 2015 – via The Economic Times.
  24. Raghavan, Tca Sharad (4 July 2015). "Over a third of rural India still illiterate: Socio Economic Census" – via www.thehindu.com.
  25. "A Greek tragedy every which way". 12 July 2015.
  26. "35 per cent urban India is BPL, says unreleased data". 17 July 2015.
  27. "Urban, poor". 18 July 2015.
  28. "Letter from the Nirmalkars: The 90 per cent". 12 July 2015.
  29. S, Rukmini; Bansal, Samarth (3 July 2015). "8 Reality Checks from the SECC" – via www.thehindu.com.
  30. "Rural realities". 7 July 2015 – via www.thehindu.com.
  31. Venkat, Vidya (9 July 2015). "Manual scavenging still a reality" – via www.thehindu.com.
  32. Raghavan, Tca Sharad (4 July 2015). "Over 48 p.c. of rural population is female" – via www.thehindu.com.
  33. "37 lakh first-time voters in India are unlettered: Census | Lucknow News - Times of India". The Times of India.
  34. "Socio Economic & Caste Census 2011: A mobile in 2 of every 3 rural homes, a salaried job in 1 of 10". 6 July 2015.

வெளி இணைப்புகள் தொகு