சமூக வளர்ச்சிகான ஆய்வு மையம்

சமூக அறிவியல் மற்றும் மானுடவியலுக்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனம்

சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையம் ( Centre for the Study of Developing Societies ) என்பது சமூக அறிவியல் மற்றும் மானுடவியலுக்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது 1963 ஆம் ஆண்டு இரசினி கோத்தாரியால் நிறுவப்பட்டது.[1] இது பெரும்பாலும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தால் வழங்கப்படும் நிதியால் இயங்குகிறது.[2] இது புது தில்லியில், தில்லி பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[3]

சமூக வளர்ச்சிகான ஆய்வு மையம்
Centre for the Study of Developing Societies
சுருக்கம்CSDS
உருவாக்கம்1963
நிறுவனர்இரசினி கோத்தாரி
வகைஅரசு தன்னாட்சி நிறுவனம்
நோக்கம்சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் ஆய்வு
தலைமையகம்29 இராஜ்பூர் சாலை, சிவில் லைன்ஸ், தில்லி - 110054
இயக்குநர்
அவதேந்திர ஷரன்
மைய அமைப்பு
நிர்வாகக்குழு
வலைத்தளம்www.csds.in

கண்ணோட்டம்

தொகு

கோத்தாரி 1963 இல் சிஎஸ்டிஐயை தொடங்குவதற்காக தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் உதவி இயக்குநர் பதவியை விட்டு விலகினார். இது துவக்கத்தில் தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா தோட்டத்தில் உள்ள இந்திய வயது வந்தோருக்கான கல்வி சங்கத்திற்கு (ஐஏஇஏ) சொந்தமான கட்டிடத்தில் இயங்கியது.[4] சிஎஸ்டிஎஸ் பின்னர் 1966-1967 இல் அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.

நூலகம்

தொகு

சிஎஸ்டிஎஸ்சில் உள்ள நூலகம் ஐஏஇஏவின் அடித்தளத்தில் ஒரு சில புத்தக அலமாரிகளுடன் தொடங்கப்பட்டு 1970 இல் முழுமையான ஒரு நூலகமாக வளர்ந்தது. இதில் முதன்மையாக சமூக அறிவியல் மற்றும் மனிடவியல் துறையில் ஆராய்ச்சி மற்றும் உயர் கற்றலுக்கான நூல்கள் உள்ளன. இந்த சேகரிப்பில் சுமார் 29,000 புத்தகங்கள் மற்றும் 5,000 இதழ்கள் மற்றும் சிறிய அளவிலான அறிக்கைகள் மற்றும் கையேடுகள் உள்ளன. 130க்கும் மேற்பட்ட இதழ்கள் தொடர்ந்து பெறப்படுகின்றன. சமகால கருப்பொருள்கள் தவிர, இந்த நூலகத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஆயுதப் போட்டி, அமைதி இயக்கம், அறிவியல் ஆய்வுகள், சூழலியல், சுற்றுச்சூழல், மனித உரிமைகள் பற்றிய படைப்புகளின் தொகுப்புகள் உள்ளன. இலக்கியம் உள்ளிட பரந்த அளவிலான துறைகளை உள்ளடக்கிய இந்தி புத்தகங்களின் தனி தொகுப்பு உள்ளது. நூல் சேகரிப்பு பட்டியல் கணினிமயமாக்கப்பட்டுள்ளது மேலும் மையத்தில் உள்ள எந்த கணினி மூலமாகவும் பட்டியலை அணுகலாம். சிஎஸ்டிஎஸ் நூலகம் டெவலப்பிங் லைப்ரரிஸ் நெட்வொர்க் மற்றும் சமூக அறிவியல் நூலக வலையமைப்பில் உறுப்பினராக உள்ளது.[5]

தரவு அலகு

தொகு

சிஎஸ்டிஎஸ் தரவுப் பிரிவு, 1965 இல் நிறுவப்பட்டது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல் நடத்தை மற்றும் அணுகுமுறைகள் பற்றிய கணக்கெடுப்பு தரவுகள் காப்பகம் பராமரிக்கப்படுகிறது. அலகில் பல இரண்டாம் நிலை தரவுத் தொகுப்புகளையும் சேகரிக்கபட்டுள்ளது, குறிப்பாக இந்தியாவின் தேர்தல்கள் குறித்த தரவுகள் உள்ளன.[6]

திட்டங்கள்

தொகு

மையத்தில் உள்ள திட்டங்களில் பின்வருவன அடங்கும்:[7]

  • ஒப்பீட்டு ஜனநாயகத்திற்கான லோக்நிதி திட்டம் [8]
  • சாராய் திட்டம் [9]
  • இந்திய மொழி திட்டம் [10]

குறிப்புகள்

தொகு
  1. "Personally speaking: Rajni Kothari". India-seminar.com. 30 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2011-09-04.
  2. About CSDS, CSDS website, 30 March 2009.
  3. "Getting to CSDS". Csds.in. பார்க்கப்பட்ட நாள் 2011-09-04.
  4. "Interview Rajni Kothari, The Centre and Indian reality". Seminar. 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-01-14.
  5. "CSDS - Centre for the Study of Developing Societies". Csds.in. பார்க்கப்பட்ட நாள் 2012-04-25.
  6. "CSDS". Csds.in. பார்க்கப்பட்ட நாள் 2012-04-25.
  7. "CSDS". Csds.in. Archived from the original on 2012-04-22. பார்க்கப்பட்ட நாள் 2012-04-25.
  8. "Lokniti". Lokniti. 2011-07-30. பார்க்கப்பட்ட நாள் 2012-04-25.
  9. "Welcome to Sarai". Sarai.net. பார்க்கப்பட்ட நாள் 2012-04-25.
  10. "CSDS". Csds.in. Archived from the original on 2012-07-29. பார்க்கப்பட்ட நாள் 2012-04-25.

வெளி இணைப்புகள்

தொகு