சம்சப்தகர்கள்

சம்சப்தகர்கள் (Samsaptakas), குருச்சேத்திரப் போரில் அருச்சுனனை கொல்வோம் அல்லது அருச்சுனனால் கொல்லப்படுவோம் என வீர சபதமிட்ட[1] திரிகர்த்த நாட்டு மன்னர் சுசர்மனின் [2] தலைமையில் கௌரவர் அணியின் வெற்றிக்காக போரிட்ட ஆயிரக்கணக்கான சத்திரியக் கூட்டத்தவர்களின் சிறப்பு படையணிகும். [3]

அபிமன்யுவின் மரணத்திற்கு காரணமான ஜெயத்திரதனை சூரியன் மறைவதற்குள் பழி வாங்க துடித்த அருச்சுனை ஜெயத்திரதன் பக்கம் நெருங்காதவாறு, சம்சப்தகர்கள் அருச்சுனனை போருக்கு அழைத்து, போர்க்களத்திற்கு வெகு தொலைவிற்கு அழைத்துச் சென்று போரிட்டனர். சூரியன் மறைவதற்கு சிறிது நேரம் இருக்கும் போது, வீரமுடன் போரிட்ட அனைத்து சம்சப்தகர்களை அருச்சுனன் கொன்றழித்தான்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. saptaka.html Samsaptakas - Warriors Sworn to Victory or Death[தொடர்பிழந்த இணைப்பு]
  2. - The Leader of the Samsaptakas[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.sacred-texts.com/hin/m07/m07025.htm SECTION XXV]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சப்தகர்கள்&oldid=3243127" இலிருந்து மீள்விக்கப்பட்டது