முதன்மை பட்டியைத் திறக்கவும்

திரிகர்த்த நாடு (Trigarta Kingdom) பரத கண்டத்தின், தற்கால பஞ்சாப் பகுதியில் அமைந்த பண்டைய நாடுகளில் ஒன்றாகும்.[1] திரிகர்த்த நாட்டின் தலைநகராக பிரஸ்தலம் எனப்படும் தற்கால முல்தான் நகரம் விளங்கியது. திரிகர்த்த நாடு, விராட நாட்டிற்கு கிழக்கில் அமைதுள்ளது. இந்நாட்டின் புகழ்பெற்ற மன்னர் சுசர்மன் ஆவார்.

மகாபாரதத்தில் திரிகர்த்த நாடுதொகு

மகாபாரத காவியத்தில் இரண்டு திரிகர்த்த நாடுகளைக் குறிப்பிடுகிறது. மேற்கு திரிகர்த்த நாடு சிவி நாட்டிற்கு மேற்கில், தற்கால பஞ்சாப் பகுதியிலும், வடக்கு திரிகர்த்த நாடு குரு நாட்டின் வடக்கில் தற்கால இமாசலப் பிரதேச மாநிலத்தின் காங்கிரா பகுதியில் இருந்ததாக கூறுகிறது. மேற்கு திரிகத்த நாட்டின் தலைநகராக பிரஸ்தலம் எனப்படும் தற்கால முல்தான் நகரம் விளங்கியது.

திரிகர்த்த நாட்டை சத்லஜ் ஆறு, பியாஸ் ஆறு மற்றும் ராவி ஆறுகள் வளப்படுத்தியது. மேற்கு திரிகர்த்த நாட்டு மன்னர்கள், கௌரவர்களுக்கு கூட்டாளிகளாகவும், பாண்டவர் மற்றும் விராட நாட்டவர்களுக்கு பகைவர்களாக விளங்கினர்.

விராட நாட்டில்தொகு

மகாபாரத காவியத்தின் விராட பருவத்தில், திரிகர்த்த நாட்டவர்களும், குரு நாட்டவர்களும் விராட நாட்டின் இருபுறங்களில் முற்றுகையிட்டு, பசுக்களைக் கவர்ந்து செல்லும் போது, அருச்சுனன் மற்றும் வீமன், குரு மற்றும் திரிகர்த்த நாட்டு சம்சப்தகர்கள் கவர்ந்த பசுக்களை கைப்பற்றி விரட்டி அடித்தனர் எனக் கூறுகிறது.

குருச்சேத்திரப் போரில்தொகு

குருச்சேத்திரப் போரில், திரிகர்த்த நாட்டு மன்னர் சுசர்மன், அவரது சகோதரர்கள், திரிகர்த்த நாட்டுச் சிறப்புப் படையான சம்சப்தகர்கள் மற்றும் ஒரு அக்குரோணி படைகளுடன் கௌரவர் அணியின் சார்பாக நின்று, பாண்டவர் அணிக்கு எதிராகப் போரிட்டனர். தருமனை உயிருடன் பிடிக்க வேண்டி, திரிகர்த்த நாட்டின் சமசப்தர்கள், அருச்சுனனை கொல்வதற்கு, போர்களத்திலிருந்து வெகுதொலைவிற்கு அழைத்துச் சென்று போரிட்டனர். இறுதியில் சமசப்தர்கள் அருச்சனால் கொல்லப்பட்டனர்.[2] [3]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிகர்த்த_நாடு&oldid=2148224" இருந்து மீள்விக்கப்பட்டது