அக்குரோணி அல்லது அக்சௌகிணி (Akshauhini) (சமசுகிருதம்: अक्षौहिणी) என்பது, பழங்காலத்து போர் அணிவகுப்பு வகைகளுள் ஒன்று. இது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது.[1][2] இந்த எண்கள் ஒவ்வொன்றிலுமுள்ள இலக்கங்களைக் கூட்டும்போது 18 என்னும் எண் கிடைக்கும். (எகா: 21870ல், 2+1+8+7+0=18). அத்துடன், இதில் தேர், யானை, குதிரை, படை வீரர் 1 : 1 : 3 : 5 என்னும் விகிதத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.

மகாபாரதத்தில் இது குறித்துப் பல தகவல்கள் காணப்படுகின்றன. மகாபாரதத்தில், குருசேத்திரப் போரின் போது பாண்டவர் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

படைப்பிரிவுகளின் கணக்கு தொகு

படைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன: ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும்.

  • 3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்
  • 3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா
  • 3 குல்மாக்கள் 1 கனம்
  • 3 கனங்கள் 1 வாகினி
  • 3 வாகினிகள் 1 பிரிதனா
  • 3 பிரிதனாக்கள் 1 சம்மு
  • 3 சம்முக்கள் 1 அனிகினி
  • 10 அனிகினிக்கள் 1 அக்குரோணி

குருசேத்திரப்போர் படை விபரங்கள் தொகு

குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அத்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலும், பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன.

கௌரவர் தரப்புப் படைகள் தொகு

துரியோதனன் தரப்பில் போரிட்ட படைகள்:

  • பிரக்கியோதிச நாட்டு பகதத்தன் படைகள் - 1 அக்குரோணி
  • மாத்ர நாட்டு சல்லியனின் படைகள் - 2 அக்குரோணிகள்
  • பூரிசுவரர்கள் - 1 அக்குரோணி
  • கிருதவர்மன் (கிருட்டிணனின் நாராயணிப் படைகள்) - 1 அக்குரோணி
  • ஜயத்திரதன் படைகள் - 1 அக்குரோணி
  • காம்போச அரசன் சுதக்சினனின் படைகள் - 1 அக்குரோணி
  • விந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப் படைகள் - 1 அக்குரோணி
  • ஐந்து கேகய சகோதரர் படைகள் - 1 அக்குரோணி
  • அத்தினாபுரத்துப் படைகள் - 3 அக்குரோணி

பாண்டவர் தரப்புப் படைகள் தொகு

  • விருஷ்னி வம்சத்துச் சாத்தியகியின் படைகள் - 1 அக்குரோணி
  • நீலனின் மகிசுமதிப் படைகள் - 1 அக்குரோணி
  • சேதி நாட்டு சிசுபாலன் மகன் திருட்டகேதுவின் படைகள் - 1 அக்குரோணி
  • மகதா நாட்டு ஜராசந்தன் மகன் சயத்சேனனின் படைகள் - 1 அக்குரோணி
  • பாஞ்சல நாட்டு துருபதனின் படைகள் - 1 அக்குரோணி
  • விராடனின் படைகள் - 1 அக்குரோணி
  • பாண்டியரும், சோழரும், பிறரும் - 1 அக்குரோணி

குறிப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்குரோணி&oldid=2599817" இலிருந்து மீள்விக்கப்பட்டது