சம்சேர் சிங் துல்லோ

இந்திய அரசியல்வாதி

சம்சேர் சிங் துல்லோ (Shamsher Singh Dullo) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

சம்சேர் சிங் துல்லோ
Shamsher Singh Dullo
மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர், பஞ்சாப் பகுதி
பதவியில்
9 ஏப்ரல் 2016 – 22 மார்ச்சு 2022
முன்னையவர்எம்.எசு. கில்
பின்னவர்அசோக் மிட்டல்
தொகுதிபஞ்சாப் பகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1947-12-06)6 திசம்பர் 1947
கன்னா, பஞ்சாப் (இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அர்பன்சு கவுர்
பிள்ளைகள்பந்தீப் சிங் துல்லோ
முன்னாள் கல்லூரிபஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
வேலைஅரசியல்வாதி

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சம்சேர் சிங் துல்லோ பஞ்சாபில் உள்ள கன்னாவில் இந்தர் சிங் துல்லோ மற்றும் சத்னம் கவுர் ஆகியோருக்கு ராம்தாசியா சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். [1] இளங்கலைப் படிப்பும் சட்டப் பாடத்தில் பட்டப் படிப்பும் முறையே கன்னா ஏ.எசு கல்லூரி, மற்றும் சட்டக் கல்லூரி, பஞ்சாப் பல்கலைக்கழகம் (சண்டிகர்) ஆகியவற்றில் படித்து முடித்தார். பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார்.

இவரது மகன் பந்தீப் சிங் துல்லோ மற்றும் மனைவி அர்பன்சு கவுர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள். [2] [3] இவரது மனைவி கன்னாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அரசியல்

தொகு

கன்னாவிலிருந்து 1980 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினரானார். கலால் மற்றும் வரித்துறையின் மாநில அமைச்சராக பணியாற்றினார். [4]

13 ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு ரோபார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பஞ்சாப் பிரதேச காங்கிரசு கமிட்டி மற்றும் கன்னா மெட்ரோபாலிட்டன் கவுன்சிலின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்தியன் வங்கியில் இயக்குநராகவும் பணியாற்றினார் மற்றும் குருநானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்தசரசில் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்தார். [5]

2016 ஆம் ஆண்டில் பஞ்சாபில் இருந்து இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்த தேர்தலில் மாநிலங்களவை வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டார். [6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sitting MP libra quits Congress to rejoin SAD" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  2. "Congress MP Shamsher Dullo's wife joins AAP as Fatehgarh Sahib candidate" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  3. "Bandeep Singh Dullo files papers as AAP candidate instead of mother" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  4. "Khanna Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  5. "Members : Lok Sabha".
  6. "All 5 candidates from Punjab elected unopposed to Rajya Sabha | punjab | top". பார்க்கப்பட்ட நாள் 2018-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சேர்_சிங்_துல்லோ&oldid=3816479" இலிருந்து மீள்விக்கப்பட்டது