சம்பல், ஜம்மு காஷ்மீர்

சம்பல் (Sumbal), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப்பகுதியில் அமைந்த பந்திபோரா மாவட்டத்தின் சோனாவாரி வருவாய் வட்டத்தில் உள்ள நகரம் மற்றும் 13 வார்டுகள் கொண்ட நகராட்சி ஆகும். இது சிறிநகரிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும், மாவட்டத தலைமையிடமான பந்திபோராவிற்கு தெற்கே 43.4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 1557 மீட்டர் உயரத்தில் உள்ளது.

சம்பல்
நகராட்சி
சம்பல் is located in ஜம்மு காஷ்மீர்
சம்பல்
சம்பல்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் சம்பல் நகரத்தின் அமைவிடம்
சம்பல் is located in இந்தியா
சம்பல்
சம்பல்
சம்பல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°14′N 74°38′E / 34.23°N 74.63°E / 34.23; 74.63
நாடு India
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்பந்திபோரா
ஏற்றம்1,557 m (5,108 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்15,041
மொழிகள்
 • அலுவல் மொழிகாஷ்மீரி மொழி, உருது, இந்தி, தோக்ரி மொழி, ஆங்கிலம்[1][2]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுJK-15

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 13 வார்டுகளும், 2,233 வீடுகளும் கொண்ட சம்பல் நகரத்தின் மக்கள் தொகை 15,041 ஆகும். அதில் ஆண்கள் 8,108 மற்றும் பெண்கள் 6,933 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 855 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 51.4% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 137 மற்றும் 44 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 5.5%, இசுலாமியர் 93.94%, கிறித்தவர்கள் 0.23% மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர். [3]

மேற்கோள்கள் தொகு

  1. "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
  2. "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020. 
  3. Sumbal Population, Religion, Caste, Working Data Bandipora, Jammu and Kashmir - Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பல்,_ஜம்மு_காஷ்மீர்&oldid=3604609" இலிருந்து மீள்விக்கப்பட்டது