சம்பா தாசு (Sampa Das) என்பவர் இந்திய உயிரி தொழில்நுட்பவியலாளர், விஞ்ஞானி மற்றும் பொதுத்துறை விவசாய உயிரிதொழில்நுட்ப நிபுணர் ஆவார்.[1] இந்திய தேசிய அறிவியல் கழகம் மற்றும் தேசிய அறிவியல் கழகம், இந்தியா ஆகியவற்றின் உறுப்பினர் ஆவார்.[2] தற்போது, இவர் கொல்கத்தாவில் உள்ள போசு நிறுவனத்தில் மூத்த பேராசிரியர் மற்றும் தாவர உயிரியல் பிரிவின் தலைவராக உள்ளார். போசு நிறுவனம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட பல-துறை ஆராய்ச்சி நிறுவனமாகும்.[3][1][2]

கல்வி

தொகு

போசு நிறுவனத்தின் பேராசிரியர் எஸ். கே. சென் மேற்பார்வையில் முனைவர் பட்டத்தினை சம்பா தாஸ் 1981இல் பெற்றார்.[2] தாசு அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் நோக்கில், பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகளுக்கு எதிரான தாவர பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றினார்.[4] இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஃப்ரீட்ரிக் மிஷெர் நிறுவனத்தில் முனைவர் பட்ட பின் ஆய்வுகளை மேற்கொண்டார்.[1] இங்கு இவர் அரிசி, கடுகு மற்றும் தக்காளி உள்ளிட்ட தாவர மாற்றத்தில் ஆர்வம் காட்டினார்.[3][1]

தொழில்

தொகு

தாசு போசு நிறுவனத்தின ஆசிரிய உறுப்பினராகப் பணியில் சேர்ந்தார்.[4]

இந்தியாவின் முக்கிய சைவ புரதத்தின் முக்கிய ஆதாரமான கொண்டைக்கடலை மற்றும் வெண்டைக்காய் ஆகியவற்றில் தாவர மாற்றத்திற்கான தனது ஆராய்ச்சியை விரிவுபடுத்தினார். தாவர மரபணுவின் அமைப்பை மாற்றியமைத்து அவற்றின் தரத்தையும் உற்பத்தியின் அளவையும் மேம்படுத்த வழிகளைத் தேடத் தொடங்கினார்.[3][1] தனது ஆராய்ச்சியின் ஆரம்பக்கட்ட வெற்றியினைத் தொடர்ந்து T3 மற்றும் T4 நிலை தாவரங்களில் இந்த ஆய்வினை விரிவுபடுத்தினார்.[3][1]

இவரது ஆய்வு தாவர மூலங்களிலிருந்து பூச்சிக்கொல்லி, புரதங்களின் செயல்பாட்டைத் தனிமைப்படுத்துதல், குணாதிசயம் மற்றும் கண்காணிப்பு ஆகியவை அடங்கும்.[2][5] பயிர் செடிகளில் வேளாண் ரீதியாக முக்கியமான மரபணுக்களின் வெளிப்பாட்டை இவர் ஆய்வு செய்தார்.[2][5]

மேனோசு சேர்க்கை ஒருவித்திலை தாவர லெக்டின்கள் மற்றும் பல்வேறு பிடி நச்சு மரபணுக்களின் வெளிப்பாடு மூலம் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு தேர்வு குறிப்பானைப் பயன்படுத்தி பூச்சி எதிர்ப்பு மரபணு மாற்ற அரிசி, கொண்டைக்கடலை மற்றும் கடுகு செடிகளின் வளர்ச்சியில் பணியாற்றியுள்ளார்.[2][5] இலக்கு அடையாளம் காணப்பட்ட பூச்சிகளிலிருந்து ஏற்பு புரதங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி லெக்டின்கள் மற்றும் வெவ்வேறு பிடி புரதங்களுக்கு இடையிலான மூலக்கூறு தொடர்புகளை இவர் ஆய்வு செய்தார்.[2][5]

பல்வேறு பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்க்கிருமிகளால் தாவரங்கள் தாக்கப்படும் போது தாவர பாதுகாப்பு மறுமொழியின் பொறிமுறையைப் புரிந்துகொள்வதில் தாசு பணியாற்றியுள்ளார். வித்தியாசமாக வெளிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வினை தொடர்பான மரபணுக்களைத் தனிமைப்படுத்தி குணாதிசயங்களைக் காணல், பசாரியம் ஆக்ஸிஸ்போரம், எப் சிற். சிகெரியசு மற்றும் சாந்தோமோனசு ஒரைசே பிவி ஒரைசே ஆகிய நோய் தாக்கத்தினால் ஆரம்ப கட்டத்தில் தோன்றும் புரதங்களை அரிசி மற்றும் கொண்டைக்கடலை செடிகளில் கண்டறிந்தல் ஆய்வுகளை மேற்கொண்டார்.[2][5]

தாவர மூலங்களிலிருந்து சில பூச்சிக்கொல்லி லெக்டின்கள் மற்றும் பிற புரதங்களை அடையாளம் காண்பது, குணாதிசயம் மற்றும் சுத்திகரிப்பு மற்றும் பயனுள்ள பூச்சிக்கொல்லி லெக்டின் தனிமைப்படுத்தல் மற்றும் நகலாக்கம் செய்தல் மற்றும் அந்தந்த தாவர மரபணு (களில்) இருந்து பிற புரத குறியீட்டு மரபணு (கள்) ஆகியவற்றில் இவர் பணியாற்றியுள்ளார். [2] [5]

கடுகு, கொண்டைக்கடலை மற்றும் துவரை ஆகியவற்றுக்கான திறமையான தாவர மீளுருவாக்கம் மற்றும் உருமாற்ற நெறிமுறையை நிறுவுவதில் தாசு பணியாற்றியுள்ளார்.[2][5] பல திசையன்களின் கட்டுமானம், டி-டிஎன்ஏ ஒருங்கிணைப்புப் பொறிமுறையை விருந்தோம்பி தாவரத்தில் செலுத்துதல் மற்றும் கைமெரிக் பிடி, புரோட்டீசு செயலைத் தடுக்கும் மரபணு(கள்) மற்றும் பிற வேளாண் ரீதியாக முக்கியமான மரபணு ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்ள முக்கிய பயிர்களில் அவற்றின் வெளிப்பாட்டிற்காகக் கட்டமைத்தார்.[5]

விருதுகளும் கெளரவங்களும்

தொகு

2007ஆம் ஆண்டில், அவர் இந்திய தேசிய அறிவியல் கழகத்தில் உறுப்பினரானார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2009இல் தேசிய அறிவியல் கழகம், இந்தியாவில் உறுப்பினரானார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Usings Nature's Tools | Journalist Joan Conrow, Original Reportage & Prose". www.journalistjoanconrow.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-03-12. பார்க்கப்பட்ட நாள் 2017-03-04.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 "Prof. Sampa Das - Bose Institute, Kolkata". www.boseinst.ernet.in. Archived from the original on 2017-04-25. பார்க்கப்பட்ட நாள் 2017-03-04.
  3. 3.0 3.1 3.2 3.3 . 
  4. 4.0 4.1 {{cite book}}: Empty citation (help)
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 "Dr. Sampa Das - Bose Institute, Kolkata". boseinst.ernet.in. Archived from the original on 2016-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-03-04.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பா_தாசு&oldid=4053867" இலிருந்து மீள்விக்கப்பட்டது