சம்புகன்
சம்புகன் (Shambuka) வால்மீகி இராமாயணக் கதைமாந்தருள் ஒருவன். தவம் இயற்றிய சூத்திரன் என்ற காரணத்தால் இராமனால் கொல்லப்பட்டவன்.
இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் (உத்தர காண்டம் வால்மீகி எழுதிய மூல நூலான வால்மீகி இராமாயணத்தில் இல்லை) சருக்கம் 73 முதல் 76 வரையிலான பகுதியில் சம்புக வதம் விவரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் திடீரென இறந்து விடுகிறான், மகனை இழந்த பிராமணன் இராமனிடம் நீதி கேட்டு வருகிறான். அந்நேரத்தில் அங்கு வரும் நாரதமுனி, சூத்திரன் ஒருவன் உனது நாட்டில் தவம் இயற்றிக் கொண்டிருப்பதாலேயே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கிறார். சம்புகனைத் தேடிச் சென்ற இராமன் அவன் தவமியற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு அங்கேயே அவனைத் தனது வாளால் தலை வேறு முண்டம் வேறாக்கிக் கொல்கிறான்.[1]
இக்கதையின்படி சம்புகன் மனித உடலோடு சொர்க்கம் செல்வதன் பொருட்டும் வானுலக மங்கையருடன் ஆடிப்பாடும் நோக்கத்திற்காக தவத்தைப் புரிந்ததாகவும் அதனாலேயே தண்டிக்கப்பட்டதாகவும் விளக்கவுரை செய்வோரும் உள்ளனர். அம்பேத்கர், பெரியார் போன்றோர்கள் சம்புக வதத்தைக் காரணம் காட்டி இராமன் கருணையுடைய அரசன் அல்லன் என்று குற்றஞ்சாட்டினர்.[2][3]
இரவீந்தரநாத் தாகூர், மகாத்மா காந்தி ஆகியோர் இதனை இடைச்செருகல் என்றும் கூறியுள்ளனர். அதே வேளையில், சூத்திரரான வால்மீகி இராமாயண காலத்திலேயே வாழ்ந்த போதும் தவமியற்றும் ரிஷியாக இருந்த போதும் இராமன் அவரைத் தண்டிக்கவோ தடுக்கவோ இல்லை என்பதும் இக்கதையை மறுப்போர் கூறும் கருத்தாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ The Ramayana of Valmiki Trans. Hari Prasad Shastri 3:579-85
- ↑ Countercurrents, "Periyar's movement" (June 28, 2003).
- ↑ B.R. Ambedkar (28-Jun-2020). Ambedkar's India. Sristhi Publishers & Distributors.
{{cite book}}
: Check date values in:|year=
(help)