சம்யுக்தா வர்மா

இந்திய நடிகை

சம்யுக்தா வர்மா (Samyuktha Varma ; பிறப்பு 26 நவம்பர் 1979) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முக்கியமாக 1999 முதல் 2002 வரை மலையாளப் படங்களில் பெண் கதாபாத்திரங்களில் தோன்றினார்.[2] 1999 ஆம் ஆண்டு வேண்டும் சில வீட்டுக்காரியங்கள் என்ற குடும்ப நாடகத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்காக இவர் சிறந்த நடிகைக்கான தனது முதல் கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். அதன் பிறகு இவர் மொத்தம் 18 படங்களில் நடித்துள்ளார். பெண் கதாபாத்திரங்களின் வலுவான சித்தரிப்புக்காக இவர் அறியப்படுகிறார். சம்யுக்தா வர்மா சிறந்த நடிகைக்கான இரண்டு கேரள மாநில திரைப்பட விருதையும், சிறந்த நடிகைக்கான இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார் . இவர் 2002ஆம் ஆண்டு நடிகர் பிஜு மேனனை திருமணம் செய்து கொண்டார்.[3]

சம்யுக்தா வர்மா
பிறப்பு28 நவம்பர் 1979 (1979-11-28) (அகவை 44)[1]
திருவல்லா, இந்திய
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1999–2002
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்தக்ச் தர்மிக் (2006)
உறவினர்கள்ஊர்மிளா உன்னி (அத்தை)
உத்தரா உன்னி (உறவினர்)
விருதுகள்சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருது
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் 26 நவம்பர் 1979 அன்று இரவிவர்மா -உமா வர்மா தம்பதியினருக்கு பிறந்தார். திருச்சூரில் உள்ள சிறீ கேரளா வர்மா கல்லூரியில் படிக்கும் போது, வேண்டும் சில வீட்டுக்காரியங்கள் படத்தில் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.[4]

திரைப்பட வாழ்க்கை

தொகு

1999 இல் வேண்டும் சில வீட்டுக்காரியங்கள் என்ற படத்தில் இவரது அறிமுகம் இருந்தது.[5] அதைத் தொடர்ந்து 2000இல் வாழுன்னோர், சந்திரனுதிக்குண்ண திக்கில்[6][7] ஆகிய படங்களில் நடித்தார்.

2000 ஆம் ஆண்டில் இயக்குநர் ராஜசேனன் இயக்கிய நாடன்பெண்ணும் நாட்டுப்பிரமணியும், இயக்குநர் பாசிலின் தயாரிப்பில் லைப் ஈஸ் பியூட்டிபுல், மோகன் இயக்கிய அங்கனே ஒரு அவதிகாலாத்து, எழுத்தாளர் கமலா தாஸின் மாதவிக்குட்டி, மதுரனோம்பாரகாட்டு , சுயம்வரபந்தல் ஆகிய சிறுகதையின் அடிப்படையில் லெனின் ராஜேந்திரன் இயக்கிய மழை போன்ற படங்களில் நடித்திருந்தார்.

2002 ஆம் ஆண்டின் இறுதியில், இவர் ரஃபி-மெகார்ட்டின் இயக்கத்தில் தென்காசிப்பட்டிணம் , இராஜசேனனின் மேகசந்தேசம் படத்திலும் நடித்திருந்தார்.[8]

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் 23 நவம்பர் 2002இல் பிஜு மேனனை[9] திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு தக்ச் தர்மிக் என்ற மகன் 14 செப்டம்பர் 2006 இல் பிறந்தார்.[10]

சான்றுகள்

தொகு
  1. "Happy Birthday Samyuktha Varma: 5 incredible movies of the actress you should watch right away". The Times of India. 28 November 2020.
  2. മേനോന്‍, മധു. കെ. ശരിക്കും, ആ നിമിഷം എപ്പോഴായിരുന്നു. Mb4Eves (in மலையாளம்). Archived from the original on 29 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-12-11.
  3. "Samyuktha Varma". Movieraga.com. May 2007. Archived from the original on 19 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-29.
  4. "About Malayalam Film Actress Samyuktha Varma". BizHat.com.
  5. "Samyuktha Varma: I was fortunate to have started my career with 'Veendum Chila Veettukaryangal' - Times of India". The Times of India.
  6. https://theprimetime.in/the-first-film-was-a-super-hit-and-the-next-six-films-were-box-office-failures-know-the-samyukthas-film-life/
  7. https://m.timesofindia.com/entertainment/malayalam/movies/news/samyuktha-varma-introduces-her-sister-sangamithra-on-social-media-is-she-headed-for-showbiz-too/amp_articleshow/74548991.cms
  8. Nair, Unni. R. "Samyuktha Verma: A Talented Star". IndiaInfo.com. Archived from the original on 28 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-12-28.
  9. "This is how Biju Menon and Samyuktha Varma celebrated their 18th wedding anniversary". Times of India.
  10. "Samyuktha Varma's latest picture goes viral". Times of India.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்யுக்தா_வர்மா&oldid=4114037" இலிருந்து மீள்விக்கப்பட்டது