பிஜூ மேனன்

இந்திய நடிகர்

பிஜு மேனன் (Biju Menon) (பிறப்பு: செப்டம்பர் 9, 1970) ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப் படங்களில் தோன்றி வருகிறார். மேலும் ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட வரவுகளையும் பெற்றுள்ளார்.[2] 1995 ஆம் ஆண்டில் புத்ரன் என்ற படத்தில் அறிமுகமானார். இரண்டு தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், இவர் 130க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார். மேலும், இரண்டு கேரள மாநில திரைப்பட விருதுகளையும், இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.[3]

பிஜூ மேனன்

షెర్లాక్ టామ్స్ లో బిజు మీనన్
ஆசியாநெட் திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிஜூ மேனன், 2016
பிறப்பு9 செப்டம்பர் 1970 (1970-09-09) (அகவை 53)[1]
திருச்சூர், கேரளா, இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்புனித தாமசு கல்லூரி, திருச்சூர்
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991– தற்போது வரை
உயரம்1.8மீ
வாழ்க்கைத்
துணை

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

மேனன் செப்டம்பர் 9, 1970 அன்று மடத்திபறம்பில் பி. என். பாலகிருட்டிண பிள்ளைக்கும், மாலதியம்மா மேனன் ஆகியோருக்கு பிறந்தார்.[4] இவருக்கு சோமன், சுரேஷ், இராசேந்திரன் மற்றும் சிறீகுமார் என்ற நான்கு சகோதரர்கள் உள்ளனர்.[5] திருச்சூரில் உள்ள ஜே.டி.எஸ் தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர், பின்னர், திருச்சூர் புனித தாமஸ் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றார். மேலும், சமூகவியலில் முதுகலையையும் பெற்றார்.[6]

பிஜு மேனன் [7] மலையாளத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான நிங்கலூடே ஸ்வந்தம் சாந்து, பருதேசாயிலேகுல்லா பதா மற்றும் மிகைலின்தே சந்ததிகள் போன்றவற்றின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ஜூத் அட்டிபெட்டியின் அறிமுகப் படமான "புத்ரன்", "மிகைலினே சந்ததிகள் என்ற படத்தின் தொடர்ச்சியான படங்களில் அறிமுகமானார்.[8] எதிர்மறை வேடங்களிலும், இரண்டாம் நிலை நாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்தார். 1990களின் பிற்பகுதியில் நாயகனாக தோன்ற ஆரம்பித்தார். இவரது நடிப்பு பாரட்டப்பட்டாலும், இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வசூலில் தோல்வியுற்றன. இரண்டாவது நாயகனாக இவரது பாத்திரங்கள் பிரபலமாக இருந்தன.

இவர் சுரேஷ் கோபியுடன் பத்ரம், எஃப். ஐ. ஆர், சிந்தாமணி கோலாகேஸ் போன்ற வெற்றி பெற்றத் திரைப்படங்களில் நடித்தார். 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் டி. வி. சந்திரன், லெனின் இராசேந்திரன், கமல் போன்ற இயக்குனர்களுடன் மழா, மதுரநோம்பரக்கட்டு, அன்யார், மேகமலர்கர் போன்ற ஒரு சில திரைப்படங்களில் தோன்றினார்.

இயக்குனர் இலால் ஜோஸ் இயக்கியிருந்த பெரும்பான்மையான படங்களில் இவர் தோன்றியுள்ளார். இதில் ஒரு மரவத்தூர் கனவு, சந்திரனுடிகுன்னா திகில், இரெண்டாம் பாவம், பட்டாளம, இரசிகன், சாந்துபொட்டு, முல்லா , இசுபானிசு மசாலா போன்றவை. கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து (1997) படத்தில் அகிலச்சந்திரன் என்ற பாத்திரத்திலும், டி. டி. தாசன் VI பி (2010) என்ற படத்தில் நந்த குமார் என நடித்ததற்காக தனது நடிப்பு வாழ்க்கையில் இரண்டு முறை சிறந்த சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். இவர் தமிழ் படங்களிலும் ஒரு எதிர்மறை வேடங்களில் செயல்படுகிறார். மேலும் மஜா, தம்பி போன்ற வெற்றி பெற்ற படங்களிலும் நடித்துள்ளார். மே 2018 இல், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நிகழ்த்திய மதுரம் மேடை நிகழ்ச்சியில் மேடை கலைஞராகவும் பாடகராகவும் தனது பல்திறமையை நிரூபித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர், மழா, மதுரநோம்பரக்கட்டு, மேகமலர்கள் போன்ற மலையாளத் திரைப்படங்களில் தன்னுடன் நடித்திருந்த முன்னாள் மலையாள நடிகையான சம்யுக்தா வர்மா என்பவரை நவம்பர் 21, 2002 அன்று திருமணம் செய்து கொண்டார்.[9][10] இந்த தம்பதியினருக்கு 14 செப்டம்பர் 2006 இல் தக்ச் தர்மிக் என்ற மகன் பிறந்தார்.

மேற்கோற்கள் தொகு

  1. "Biju Menon profile". CiniDiary. 15 October 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Interview with Biju Menon". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Interview-with-Biju-Menon/articleshow/29360814.cms. 
  3. "ശരിക്കും, ആ നിമിഷം എപ്പോഴായിരുന്നു". Mathrubhumi. 29 November 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Biju Menon". Mangalam. 6 December 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Archived copy". 8 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 January 2011 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  6. "Archived copy". 18 May 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 May 2015 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  7. "Archived copy". 7 January 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 January 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  8. "Puthran on IMDb". IMDb. 12 January 2019. 9 February 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Archived copy". 30 January 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 December 2008 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  10. "Archived copy". 21 November 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 December 2008 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜூ_மேனன்&oldid=3794597" இருந்து மீள்விக்கப்பட்டது