சம்வர்தகம்

சாம்வர்தகம் அல்லது சன்வர்தகம் என்பது இந்து மதம் மற்றும் சைன மதத்தில், தெய்வீக சக்தி அல்லது இந்திரனால் பயன்படுத்தப்படுகிற சக்தி என்று பொருள்படுவதாகும். ஆற்றல் அல்லது நெருப்பு மேகம் என்று விவரிக்கப்படும் இந்த சக்தி, இந்திரன் விரும்பாததை அழிக்க பயன்படுத்தப்படுகிறது என்று இந்து மற்றும் சைன மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்வர்தகம் வால் நட்சத்திரங்களுடன் வலுவாக தொடர்புடையது.[1]

விளக்கம்

தொகு

இந்து மதம் மற்றும் சைன மதத்தில், சம்வர்தகம் என்பது முதன்மையாக இந்திரனால் பயன்படுத்தப்படும் ஒரு சக்தியாகும்.[2] இருப்பினும், சில நூல்கள் இந்திரனைத் தவிர மற்ற தெய்வங்களால் இது படைக்கப்பட்டதாக சித்தரிக்கின்றன. இந்த சக்தி நம்பமுடியாத அளவிற்கு அழிவுகரமானதாக சித்தரிக்கப்படுகிறது.

மகாபாரத வன பருவத்தில், இந்திரன் தனக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே ஒரு சர்ச்சையைத் தீர்க்க இந்த சக்தியை பயன்படுத்துகிறான். இதிகாசத்தில், பொறாமையும் பெருமையும் கொண்ட இந்திரன் பிருந்தாவனத்தின் நிலங்களை வெள்ளத்தில் மூழ்கடிப்பதற்கு மேகத்தை அனுப்புகிறான்; மேகம் கொண்டு வரும் பேரழிவு தரும் மழையிலிருந்து நிலத்தை பாதுகாக்க கோவர்தன மலையை உயர்த்தும் கிருஷ்ணரின் தலையீட்டால் இது நிறுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.[2]

வன பருவத்தில், தருமன் சூரியனிடம், "உன் கோபத்தால் பிறந்த சம்வர்தக நெருப்பு பிரபஞ்சம் கலைந்தவுடன் மூன்று உலகங்களையும் இருப்பையும் மட்டும் அழிக்கட்டும்" என்று பிரார்த்தனை செய்கிறான். இதேபோல், மார்கண்டேய முனிவர் தருமனிடம் சம்வர்தகம் எப்படி ஒரு அசுபமான காற்றினால் பரவி பூமியை விழுங்கும் என்பதை விவரிக்கிறார்.[3]

கந்த புராணத்தில், ஒரு உருத்திரன் (புயல் கடவுள்) கடல்களை குடிக்க அச்சுறுத்திய ஒரு பெரிய காளையை அடக்குவதற்கு சம்வர்தகாவை விடுவிக்கவும் இந்த சக்தியை உபயோகப்படுத்தியதாக கூறப்படுகின்றது. இந்தக் கதையில், சம்வர்தகம் பொங்கி எழும் நெருப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கர்காவின் படைப்புகளில், சம்வர்தகம் ஒரு பேரழிவு தரும், ஆற்றல்மிக்க சக்தியாக விவரிக்கப்படுகிறது. அது இரண்டு வால் நட்சத்திரங்களில் ஒன்றாக உள்ளது.[1] இந்த இரட்டை வால்நட்சத்திரங்கள் மலைகள் மற்றும் பெருங்கடல்களை மூழ்கடிக்கும் பூகம்பங்கள் மற்றும் விண்கல் மழைகளை ஏற்படுத்தும் என்று கர்கா எழுதுகிறார். சம்வர்தகம் அதிக அழிவை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிடுகிறார்.[1]

மற்றொரு வேத நூல் சம்வர்தகத்தை வால் நட்சத்திரம் என்றும் குறிப்பிடுகிறது. இந்த உரையில், வால் நட்சத்திரம் தோன்றி, வானத்தின் மூன்றில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர்கிறது. இது "மெல்லிய பயங்கரமான செம்பு நிற புகையை வெளியேற்றும்" என்று விவரிக்கப்படுகிறது.[1] வால் நட்சத்திரம் உலகிற்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கும் போது, அரசர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 R. N. Iyengar Raja Ramanna. "A Profile of Indian Astronomy before the Siddhāntic Period" (PDF). Indian Institute of Science.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "Krsna, The Supreme Personality of Godhead". krsnabook.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  3. Bandyopadhyay, Indrajit (2013-02-20). Mahabharata: A Tribute of Four Essays (in ஆங்கிலம்). Lulu Press, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781105118654.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்வர்தகம்&oldid=4108296" இலிருந்து மீள்விக்கப்பட்டது